இப்படியும் சில மனிதர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

இப்படியும் சில மனிதர்கள்


ரமேஷ் : இல்ல... நீ என்னை மறந்துட்டு, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும்!

பெண் : அப்படி சொல்லாதடா ரமேஷ்; எனக்கு நீ வேணும்டா!

ரமேஷ் : இங்க பாரு... நீ என் மேல வைச்சிருக்கிற அன்பு உண்மைன்னா, மறுக்காம சத்தியம் பண்ணு!

பெண் : (உடைந்து அழுகிறார்)

சென்னையை சேர்ந்த 28 வயது ரமேஷ், ஆசை ஆசையாய் காதலித்த பெண்ணிற்கு திருமணமாகி, 4 மாதங்கள் ஆகிறது!

எப்படி ரமேஷ், இப்படி ஒரு முடிவுக்கு உங்களால வர முடிஞ்சது?

'அவளாவது நல்லா இருக்கட்டும்'னு நினைச்சேன் சார்.

மெலிந்த தேகம், கலைந்த கேசம், மஞ்சள் பூத்த கண்கள், உப்பிய வயிறு, வீங்கிய கால்கள்... மூச்சுவிட சிரமப்பட்டபடி பரிதாபமாய் அமர்ந்திருக்கிறார் ரமேஷ். கலங்கி நிற்கும் அந்த கண்களில், இன்னும் அந்த காதல் மிச்சமிருக்கிறது! 'வாரத்துக்கு ரெண்டு நாள், 'டயாலிசிஸ்' பண்ணணும். இந்த வாரத்துல, இது ரெண்டாவது தடவை...' ரமேஷின் தோள் தொட்டு, ஆறுதலாய் சொல்கிறார் அவரது நண்பர் சண்முகம்.

கடந்த, 2013 பிப்ரவரி வரை, 26 வயது இளைஞனுக்கு உரிய எல்லா சந்தோஷங்களும், ரமேஷிடமும் இருந்தன. எமனாய் வந்தது, பின்னந்தலையில் அந்த வலி! மருத்துவ பரிசோதனையின் முடிவு, இரண்டு சிறுநீரகங்களும் தானாகவே செயலிழந்து விட்டதாக சொல்ல, ரமேஷின் வாழ்க்கையை இருள் சூழ்ந்தது. இரண்டே தீர்வுகள்தான்! ஒன்று, மரணம் வரைக்கும், 'டயாலிசிஸ்' எனப்படும், 'ரத்த சுத்திகரிப்பு' செய்து கொள்ள வேண்டும்; மற்றொன்று, 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை' மேற்கொள்ள வேண்டும் - மருத்துவர்கள் இப்படிச் சொன்னதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறார் ரமேஷ். ஆனால், அதற்கான செலவு அவரை மிரள வைத்திருக்கிறது. அதனால், 'டயாலிசிஸ்' தொடர்ந்து கொண்டிருக்கிறது; நோயும் முற்றிக் கொண்டே இருக்கிறது.

இந்த நோய் வந்ததுக்கப்புறம்...?

'பணம் இருந்தா மட்டும்தான் வாழ்க்கை'ன்னு தெரிஞ்சுக்கிட்டேன் சார்! 2008ல, கல்லுாரி படிப்பு முடிச்சதுக்கப்புறம், சென்னை, பெங்களூரு, டில்லின்னு வேலை பார்த்தேன். மாச சம்பளம் 25

ஆயிரம் ரூபாயை, தண்ணியா செலவு பண்ணினேன். அப்ப தெரியலை, இது மாதிரி ஒரு பிரச்னை வரும்னு! சேமிக்கணும் சார்... சம்பாதிக்கிற காசுல கொஞ்சமாவது சேமிக்கணும். இல்லேன்னா, பெத்த தாய், தகப்பன் கூட மதிக்க மாட்டாங்க; உடல்ரீதியா இப்ப நான் அனுபவிக்கிற வேதனையை விட, மனரீதியா நான் அனுபவிக்கிற அந்த வேதனை தான் அதிகம்!

கடந்த 2011ல், ரமேஷின் அம்மா, கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்திருக்கிறார். அவரது சிகிச்சைக்காக செலவு செய்து, அவரை காப்பாற்ற முடியாமல் போன விரக்தியில், ரமேஷின் மருத்துவ சிகிச்சைகளை, 'அர்த்தமற்றது' என்று நினைக்கிறாராம் அவரது அப்பா. உடன் பிறந்த அண்ணனின் சொற்ப வருமானமோ, அவரது குடும்ப செலவுகளுக்கே சரியாக இருக்கும் நிலையில், சண்முகம் உள்ளிட்ட உயிர் நண்பர்கள் தரும் பணம்தான், 'டயாலிசிஸ்' செய்ய வரும் ரமேஷின் போக்குவரத்து செலவிற்கு பயன்படுகிறது. 'முட்டை, பால் எல்லாம் சேர்த்துக்கணும்னு டாக்டர் சொல்றாங்க; ஆனா, அதுக்கு வசதியில்லை சார்' விரக்தியாய் சொல்கிறார் ரமேஷ்.

ஆக, மனுஷனால விதியை ஜெயிக்க முடியாது இல்ல?

அப்படி இல்ல சார்... இந்த மாதிரி நண்பர்கள் இருந்தா நிச்சயம் ஜெயிக்கலாம்; ரெண்டு வருஷமா என் மரணத்தை தள்ளிப் போட்டுட்டு வர்றது என் நண்பர்கள்தான்!

சொல்லி முடிக்கும் முன்பே, ரமேஷின் கண்களில் எட்டிப் பார்க்கிறது கண்ணீர். உடனே துடைத்து விட, கைநீட்டுகிறது சண்முகத்தின் நட்பு.

இந்த நிமிஷம் ரமேஷ் மனசுல என்னென்ன ஆசைகள் இருக்கு?

பெருசா ஒண்ணும் இல்லை; எனக்காக இப்படி கஷ்டப்படுற என் நண்பர்களுக்கு, நான் ஏதாவது திருப்பி செய்யணும். ஆனா, முடியுமான்னு தான் தெரியலை.

பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியுற்ற தன் நண்பன் சண்முகம், மீண்டும் தேர்ச்சி பெற்று வரும் வரை, தன் ஒரு வருட கல்லுாரி படிப்பை தியாகம் செய்திருக்கிறார் ரமேஷ். அந்த தியாகம், அவர்களின் நட்பை ஆழமாக்கியிருக்கிறது. இன்று, தன் ஒரு சிறுநீரகத்தை தர முன் வருகிறார் சண்முகம். 'வேண்டாம்; நீ நல்லா இருக்கணும்' என, நட்போடு மறுக்கிறார் ரமேஷ்.

எல்லாம் சரி ரமேஷ்... காதலை தியாகம் பண்ணினது சரியா?

எனக்கு உடம்பு முடியாத நேரத்துல, ஒரு தாயா இருந்து அவதான் பார்த்துக்கிட்டா; அப்படிப்பட்ட தாயை, வாழ்க்கை முழுக்க கஷ்டப்படுத்தி பார்க்கணும்னு நினைக்கிறது நியாயமா சார்?

ரமேஷின் இந்த கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை;

கூடவே, இன்னொரு கேள்விக்கும்...

ஒரு 28 வயசு பையனுக்கு என்னென்ன ஆசைகள், கனவுகள் இருக்கும்னு, ஏன் சார் அந்த கடவுள் புரிஞ்சுக்க மாட்டேங்குறார்?


ஒரே ஒரு வார்த்தையில்...யாராவது உங்களை குணப்படுத்த வந்தால்...?ரமேஷ்: வருவாங்களா?

பா.ரமேஷ் 97910 10234

-தினமலர்

13 comments:

  1. Touching. Lrt us pray for him getting transplant operation success.

    ReplyDelete
  2. Dear Alex sir ..Gd morning..

    please give some idea about tamil typing in kalviseithi site .. ie... which tamil font? and how to type it ?

    Please give your Mobile Number... My number is 9543966095

    ReplyDelete
    Replies

    1. If it is Mobile, you may download the Ezhuthani software
      If it is Laptop, you may download the Azhaghi+

      Delete
    2. Hi Ramesh Sir, you pray to Lord JESUS CHRIST and believe him. He will solve all your problems.

      Delete
  3. Dear friends! If u want to cure any disease .. u can believe ur self... and pls see the website www.anatomictherapy.org

    ReplyDelete
  4. Use natural treatememt... surely u ll cure soon... see the website pls

    ReplyDelete
  5. No need money to cure any disease.. only thing is positive mind is needed...

    ReplyDelete
  6. Touching story.. manadhai thalara vidatheergal. God wil help u.

    ReplyDelete
  7. Saturagiri malai adivarthula oru hospital la ellam serious disease kum natural treatment kelvi patu iruken.especially dialysis

    ReplyDelete
  8. Saturagiri malai adivarthula oru hospital la ellam serious disease kum natural treatment kelvi patu iruken.especially dialysis

    ReplyDelete
  9. Saturagiri malai adivarthula oru hospital la ellam serious disease kum natural treatment kelvi patu iruken.especially dialysis

    ReplyDelete
  10. do t worry..very soon u will be alright..i will pray to god...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி