வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை, இம்மாத இறுதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, வருமானவரித் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப் பாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், வருமானவரிக் கணக்கு அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவிடப்பட்டது. ஆனால், தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தங்கள் வருமானவரிக் கணக்கை, இன்னும்பள்ளிக்கல்வித் துறை மற்றும் வருமானவரித் துறையில் தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், கடைசி கட்ட பரபரப்பை தவிர்க்க, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப் பட்டு உள்ளது. அதில், 'அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், தங்கள் வருமானவரிக் கணக்கை, வரும் 31ம் தேதிக்குள், வருமானவரித் துறையில் தாக்கல்செய்து, நகலை, பள்ளிக்கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறுதாக்கல் செய்யாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், 20 ஆயிரம் ரூபாய்அபராதத் தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளே, வருமானவரித் துறையில் செலுத்த வேண்டும். இதில், கல்வித் துறை தலையிடாது' என, எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி