2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு எண். 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.
மாணவ/மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு அலுவலக வேலை நாட்களில் இப்பயிற்சி மையஅலுவலகத்தில் வழங்கப்படும்.தமிழ் நாட்டைச் சார்ந்த அனைத்து மாணக்கர்களும் இப்பயிற்சிக்கு சேர தகுதியுடையவர்கள் ஆவர். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சிமையத்தில் பயின்ற மாணவ/மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.தகுதிபெற்ற மாணக்கர்கள் இப்பயிற்சி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மூன்று புகைப்படம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் தகுதி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, இப்பயிற்சி மையத்தில், மூத்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி அலுவலர்களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும், நடத்தப்படுகிறது. ஆளுமைத் தேர்வுக்கு, புது டெல்லி செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ. 2000/- வழங்கப்படுகிறது. மேலும் பத்து நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடுகளும் இப்பயிற்சி மையத்தால் செய்யப்பட்டு வருகிறது.2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் பற்றி விவரம் இப்பயிற்சிமைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :முதல்வர்,அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம்,சென்னை-28. தொலைபேசி எண். 044-24621475.
ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
ReplyDeleteஅனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடைய உரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்து உள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின் நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
அனைவரும் வருக! ஆதரவு தருக!
இப்படிக்கு,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு :-
ஜெகநாதன் மதுரை – 9442880680
ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் –
மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
ரமேஷ் நாமக்கல்-9942015830
சிவபிரகாஷ் கோவை –7708058814
பழனி திருவண்ணாமலை-9524805873