தமிழக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2015

தமிழக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும்

தமிழக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஒரு காலத்தில் 5 வயது முடிந்தால்தான் பள்ளிப்படிப்பு தொடங்கும். இப்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கியதில் இருந்து 3 வயதில் இருந்தே பள்ளிப்படிப்பு தொடங்கிவிட்டது. இப்போது 3 வயது முடிவதற்குள் "பிரீ கே.ஜி.' வகுப்பில் சேர்க்க ஆரம்பித்துள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் 3 வயதிலேயே பள்ளிகளுக்கு அனுப்புவது அவசியமாகி விட்டது. இதனைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் அபரிமிதமான கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி