சேலம் மாவட்ட அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு, பிரபல ஓவியர் மூலம், ஒரு நாள்பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில், ஓவிய ஆசிரியர் பணியிடங்களும், அதற்கான பாடநேரமும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட தனித்தனி பாடவாரியாக, பல்வேறு திட்டங்களின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஓவிய ஆசிரியர்களுக்கும், ஒரு நாள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழக கலை பண்பாட்டு மையத்தின் சார்பில், மார்ச், 14ம் தேதி காலை, 10 மணி முதல், மாலை, 4 மணி வரை, சேலம் ஸ்வர்ணபுரி வி.எம்.கே., அண்டு வி.எம்.ஜி., திருமண மண்டபத்தில் நடத்தப்படும் இப்பயிற்சியில், தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வம் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கிறார். இதில், அரசு, நகரவை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், அனைத்து வகை ஓவிய ஆசிரியர்களும் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி