'பிரிட்டீஷ் கைக்கூலி' : காந்தி மீது கட்ஜு காட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2015

'பிரிட்டீஷ் கைக்கூலி' : காந்தி மீது கட்ஜு காட்டம்

தேசத்தந்தை காந்தியடிகளை, 'பிரிட்டீஷ் கைக்கூலி' என, 'பிரஸ் கவுன்சில்' அமைப்பின் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறி, மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.


இதுகுறித்து, அவர், இணைய பக்கத்தில், எழுதியுள்ளதாவது:இந்தியாவில் காந்தியடிகள் மேற்கொண்ட போராட்டங்கள், மத ரீதியாகவே இருந்தன. இதன்மூலம், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை, அவரும் பின்பற்றினார்.அவரின் ஒவ்வொரு பேச்சும், எழுத்தும், இந்து மதம் மற்றும் அதன் கொள்கைகளின் அடிப்படையிலேயே இருந்தது.
இவ்வாறு அவர் தொடர்ந்து பேசிய வந்ததால் தான், முஸ்லிம்கள், முஸ்லிம் லீக் என்ற கட்சியில் சேர்ந்தனர். பிரிவினைவாதம் இவ்வாறு தான் தோன்றியது.இரண்டாவதாக, சத்தியாகிரக போராட்டங்களை காந்தி நடத்தினார். இதன் பின்னணியிலும், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளது.மூன்றாவதாக, நாடு பிரிவினையின் போது, நவோகாளி என்ற இடத்தில் நடைபெற்ற மத கலவரத்தை அடக்க, அவர் மேற்கொண்ட செயல்கள், கலவரத்தை தூண்டும் விதத்தில் இருந்தன.இவ்வாறு, கட்ஜு எழுதியுள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி