கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பரிமளம் மெட்ரிக் பள்ளியில் கடந்த 18ம் தேதி பிளஸ்2 கணித தேர்வு நடந்தது. இதில், ஓசூரைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் மகேந்திரன், கோவிந்தன் என்ற இரண்டு ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களாக பணியாற்றினர்.
அப்போது தேர்வுக்கு வராத மாணவன் ஒருவனின் கேள்வித்தாளை வாட்ஸ் அப் மூலம் படம் எடுத்து, தாங்கள் பணிபுரியும் பள்ளிக்கு அனுப்பினர். ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையை, அங்கு சோதனைக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கண்டறிந்தார். பள்ளி கண்காணிப்பு கேமராவிலும் ஆசிரியர்களின் நடவடிக்கை பதிவாகியது. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. வாட்ஸ் அப்மூலம் கணக்கு பாட கேள்வித்தாளை அவுட் செய்தது தொடர்பாக இதுவரை ஒரு ஆசிரியர் உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்ல விஷயம் தான்
ReplyDeleteEnna pa eppadi pandrikalepa......
ReplyDeleteEnna pa eppadi pandrikalepa......
ReplyDelete