சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. சென்னை சேலையூரில் உள்ளசியோன் பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், அப்பள்ளியில் பணியாற் றும் 860க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அப்பள்ளியின் முதல்வர் டாக்டர் என்.விஜயன் கூறியதாவது:சமச்சீர்கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு கல்வியின் தரம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும், ஆசிரியர்களின் கல்வித் தரமும் குறைந்து விட்டதால் மாணவர்கள் பாதிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் சேரும் ஆசிரியர்களின் தகுதியை பரிசோதிப்பதற்காக தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.அதே போல், தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் தகுதியை பரிசோதிப்பதற்காக நேற்று திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையில், அவர்களுடைய பாடத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் வல்லு நர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு விஜயன் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி