CRC: சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை நாளை வெளியாகிறது அரசாணை எண் : 62. நாள்: 13.03.2015 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2015

CRC: சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை நாளை வெளியாகிறது அரசாணை எண் : 62. நாள்: 13.03.2015


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சிக்கான ஈடுசெய் விடுப்பிற்கான அரசாணை விவரம் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA வின் 6 மாத கோரிக்கைகளில் ஒன்று, வெற்றிகரமாக நிறைவேறுகின்றது. ஆகஸ்ட் 2014 ல் இருந்து கடந்த 6 மாதங்களாக SSTA மாநில தலைவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநரை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களைப் போல தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவிலான ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை வைத்து பள்ளி கல்வி அரசாணையை திரட்டி இயக்குனரிடம் அளித்து தொடக்க கல்வித்துறைக்கும் வழங்க தொடர்கோரிக்கை வைக்கப்பட்டது .SSTA மாநில பொறுப்பாளர்கள இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரை சந்தித்த விவரங்கள் நமது வலைத்தளத்திலும் மேலும் அனைத்து கல்விசார் இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் நாம் அறிந்ததே.

அதன் தொடரச்சியாகதற்போதைய அரசாணை வெளியிடப்படுகிறது.நம் கோரிக்கை வெற்றி பெற பிற தோழமை இயக்கங்களும் வலியுறுத்தின ஆசிரியர்கள் உரிமைக்கு ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஆசிரிய சங்கங்களுக்கும் நமது SSTA சார்பாக நன்றி...நன்றி .. நன்றி ... என்றும் ஆசிரியர்களுக்கான SSTA

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி