TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?- புதியதலைமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2015

TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?- புதியதலைமுறை


திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பே வெளிவராமல் உள்ளது.

தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன? தேர்வுக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து காணலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மூலம் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு வரை தேர்ச்சி பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மற்றொரு வாய்ப்பிற்காக காத்திருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர் 2012 ஆம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடைபெற்று வருகின்றது. 2012 ல் இரு முறையும் 2013 அம் ஆண்டு ஒரு முறையும் தேர்வு நடந்தது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வதிலும் அதில் பின்பற்றப்படும் முறைகள் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள காரணத்தினால் 2014ஆம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பே வெளியாகாமல் இருக்க, 2015 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு நேரமும் நெருங்கி வருகிறது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதாவிடம் விளக்கம் கேட்டபோது நீதிமன்ற வழக்குகள் காரணமாகவே அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதாகவும், இந்தாண்டிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த விளக்கமேதும் கொடுக்கப்படவில்லை. இதனிடையே, இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், வெயிட்டேஜ் முறை நீக்கப்பட வேண்டும் எனத் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மார்ச் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

34 comments:

  1. ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
    அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
    தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடைய உரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்து உள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின் நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
    அனைவரும் வருக! ஆதரவு தருக!
    இப்படிக்கு,
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
    தமிழ்நாடு.
    தொடர்புக்கு :-
    ஜெகநாதன் மதுரை – 9442880680
    ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் – 
    மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
    ரமேஷ் நாமக்கல்-9942015830
    சிவபிரகாஷ் கோவை –7708058814
    பழனி திருவண்ணாமலை-9524805873

    ReplyDelete
    Replies
    1. tet'la 82 to89 marks yeduthu pass'nu certificate vaithu ullavarin nilai enna? welfare school posting'el engalaium serthu kolwargala illai nanga mendum xam yelutha venduma?

      Delete
    2. ADW postil relaxation undu enakku terinthavar selection listil ullar

      Delete
  2. ஆதி திராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளின் பணி நியமனம் தள்ளி போவதன் நோக்கம் என்ன?
    பணி நியமனத்தில் தாமதம் ஏன்?
    ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ஆகஸ்டில் நடைபெற்று கிட்டத்தட்ட அனைத்து பணி நியமனங்களும் நடைபெற்று முடிவடைந்த நிலையில் கள்ளர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணி நியமணம் மட்டும் இன்னும் நடைபெறாமல் தாமதமாகி வர முக்கிய காரணம் சகோதரர்கள் ராமர் மற்றும் சுடலை மணி வழக்கு.நலத்துறை பள்ளி பணி நியமனத்திலும் அனைத்து பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றியே பணி நியமனம்
    நடைபெற வேண்டும் என்ற கோணத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.இதை நீதி மன்றம் ஏற்று கொண்டு நலத்துறை பள்ளிகளின் ஆசிரியர் தெரிவு பட்டியல் மற்றும் பணி நியமனத்துக்கு தடை விதித்து வழக்கு நடைபெற்று கொண்டு இருக்கிறது.பல முறை வழக்கு நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தாலும் அரசு வழக்குரைஞர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

    மேலும் வாதியின் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.வழக்கு கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக விசாரனைக்கு வந்த போதும் அரசு வழக்குரைஞர் ஆஜராகாமல் இருந்த காரணத்தால் ஏப்ரல் 13 அன்று ஒத்திவைக்கப்பட்டது.மேலும் வழக்கின் வாதமானது மிகவும் காரசாரமாக சென்று கொண்டு உள்ளதாலும் வழக்கு அரசுக்கு எதிராக தீர்ப்பாக வாய்ப்பு உள்ளதாக கருதும் சூழல் பரவி வருகிறது.

    தாமதத்தின் உண்மையான காரணம்.
    வழக்கமாக ஆசிரியர் பணி நியமனத்தை பொறுத்தவரை தேர்வு மற்றும் விடுமுறை காலமானது கருத்தில் கொள்ளப்படும்.ஏன் என்றால் விடுமுறை காலங்களில் நியமனம் நடைபெற்றால் அதற்கும் சேர்த்து சம்பளம் வழங்க வேண்டும்.எனவே நிதி தொடர்பான நிகழ்வுகளை கொண்டே நியமனம் நடைபெறுவது வழக்கம்.அதோடு மட்டுமல்லாமல் இந்த முறை தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் அதிகம் தொடரப்பட்டதால் அனைத்தையும் விரைந்து முடிவுக்கு கொண்டு வருவதே அடுத்த தகுதி தேர்வு எவ்வித தடங்களும் இல்லாமல் தொடங்கும் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் நியமனம் மற்றும் மதிப்பெண் தளர்வு,வெயிட்டேஜ் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தற்போது நடைபெற்று வருவதாலும் மேலும் இனி நடைபெற போகும் பணி நியமனங்கள் தொடர்பாக எந்த வழக்கும் நீதி மன்றத்தில் பதியபடாமல் இருக்கவுமே அரசு இந்த வழக்கில் காலம் தாழ்த்தி வருகிறது.அரசு காலம் தாழ்த்தி வருவதால் இந்த வழக்கில் தோல்வியை தழுவும் என்ற கருத்து தவறானது.

    நம்மை பொறுத்தவரை தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்து இருப்பதால் இந்த கால தாமதம் சற்று கோபமும்,நம் மீது அக்கறை இல்லாமல் இருப்பதும் போன்ற நிலை உருவாகியுள்ளது.ஆனால் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.இந்த நலத்துறை பள்ளிகளின் நியமனம் முன்னிரிமை அளித்தது அரசு.ஆக அதில் இதுவரை பின்பற்று வந்த நடைமுறையே மீண்டும் தொடர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.இது அரசின் கொள்கைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு என்பதால் அரசின் முடிவு எடுக்கும் கெளரவம் இதில் அடங்கியுள்ளது.அதை மக்கள் நல அரசு என்று விட்டு கொடுக்காது.மேலும் இது சமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட கொள்கை.அரசின் கொள்கை முடிவில் நீதி மன்றம் தலையிட முடியாது என்பதாலும் நியமனங்களில் இட ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு என்பதாலும் இதில் நீதி மன்ற தலையீடு என்பது குறைவு.அப்படியே வழக்கு அரசுக்கு எதிராக திரும்பினாலும் நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை செய்யுங்கள் என்று மட்டுமே கூற இயலும்..இட ஒதுக்கீட்டில் ஆணை பிறப்பிக்க முடியாது.

    மேலும் இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாலும் முடிந்தவரை அரசு இதை ஏப்ரல் இறுதிவரை கூட நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.ஏன் என்றால் ஏப்ரல் இறுதி மாத இறுதியில் தீர்ப்பு பெறுவதால் எதிர்த்தரப்பினர் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு குறைவு.

    ReplyDelete
  3. மேலும் உச்ச நீதிமன்ற வழக்கும் மே மாதத்திற்கு முன்பாக முடியும் என்பதே உண்மை.ஏன் என்றால் வரும் ஆகஸ்ட் மாதம் தகுதி தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அரசு உள்ளது.ஆகஸ்ட் மாதம் தேர்வு வைக்கப்பட வேண்டுமென்றால் மே மாதம் காலிபனியிடம் மற்றும் தேர்வு பற்றிய முறையான அறிவிப்பு நடைபெற்றாக வேண்டும்.உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் மட்டுமே அடுத்த தேர்வு என்பது உண்மை.ஆனால் ஆகஸ்ட் மாதம் தேர்வு வருவது உறுதி என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதால் வழக்குகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் என்பதை சூசகமாக தெரிவிக்கிறது.

    வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளது என கூறி உச்சநீதிமன்றம் ஏற்றுகொண்டாலும் மதிப்பெண் தளர்வு மற்றும் இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு என்பதாலும் வழக்குகள் தள்ளுபடி ஆனாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டு தான் செல்ல வேண்டும்.இனி நடைபெறும் நியமனங்களும் தீர்ப்புக்குட்பட்டு நடக்க வேண்டும் என்றும் கூறி இருப்பதால் ஒரு வேலை தீர்ப்பு வந்தாலும் அது இனி நடைபெறும் நியமனத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.2013 தகுதி தேர்விற்கு பொருந்தாது என்பதே உண்மை.ஏன் எனில் மற்ற மாநிலங்களில் நடைபெற்ற வழக்குகளில் உள்ளது போன்று பணி நியமனத்தில் ஊழல் உள்ளது என்றோ நேர்மையான முறையில் தேர்வு நடத்தவில்லை என்றோ வழக்கு தொடரப்படவில்லை.

    அரசின் தேர்வு முறையும்,மதிப்பெண் தளர்வும் தவறு என்று தான் வழக்கு பதியபட்டுள்ளது.ஆக அரசின் கொள்கை முடிவில் தனி நபரின் ஆதிக்கமோ நீதிமன்றத்தின் ஆதிக்கமோ இருக்க வாய்ப்பு இல்லை.அது அரசின் நிர்வாக திறனையும்,அவர்களின் ஆட்சி திறன் மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால் அரசுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் அரசுக்கு ஆதரவாகவே விரைவில் முடிவடையும்.

    நம் உரிமையை மீட்டெடுப்போம்

    மே மாதத்திற்குள்ளாக அனைத்து வழக்குகளும் இறுதி நிலை அடைந்து வரும் 2015-16 கல்வியாண்டில் தொடக்கத்தில் பணி நியமனம் நடைபெறுவது உறுதி என நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    இருப்பினும் அரசின் முழு கவனத்தையும் நம் மீது திருப்பவும்,அரசு வழக்குரைஞர் வரும் காலங்களில் தவறாமல் ஆஜராகி விரைவில் நம் வழக்கை முடித்து வைக்கவும்,மக்கள் நல அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டி
    நம் சொந்தங்கள் வரும் 23.03.2015 அன்று சென்னையில் தொடர் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.இந்த அறவழி போரட்டத்திற்கு ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் கள்ளர் நலத்துறை நியமனங்களுக்காக காத்து இருக்கும் நண்பர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நம் கோரிக்கைகள் வெற்றி பெற இங்கே உங்கள் தகவல்கள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யவும்.

    ஒற்றுமையே பலம் என்பதை நிரூபிக்கும் சரியான தருணம் இதுவே.தவறாமல் கலந்து கொண்டு துணிவுடன் மீட்டெடுப்போம் நம் உரிமைகளை...

    இப்படிக்கு கு.சந்திர மோகன்,பள்ளிகூடம் இணையம்

    மற்றும் போரட்ட குழுவினர்கள் .........

    ReplyDelete
    Replies
    1. பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே....

      Delete
    2. இட ஒதுக்கீட்டை எதிர்த்து எந்த வழக்கும் பதியப்படவில்லை.

      அரசின் கொள்கை முடிவு மக்களை பாதிக்கும் போது, அப்படியே ஏற்றக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நீதிமன்றங்கள் தலையிட்டு அரசின் கொள்கை முடிவை மாற்றியாருக்கின்றன என்ற நிகழ்வுகள் மிகுதியாக உள்ளன.

      உதாரணத்திற்க்கு TET-ஐ எடுத்துக்கொள்வோம்.
      1. அரசு ஆணை 252-ஐ (Weightage Slap System) பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு, இந்த ஆணையை இரத்து செய்தது.

      2. அரசு ஆணை 25 (மதிப்பெண் தளர்வு) பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு, இந்த ஆணையை இரத்து செய்தது.

      அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறிவிட்டு, ஒரு வேலை தீர்ப்பு வந்தால் என்ற கூற்று இத்த பதிவின் தெளிவின்மையை காட்டுகிறது.

      அதுவும் இனி நடைபெறும் நியமனத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.2013 தகுதி தேர்விற்கு பொருந்தாது என்பதை எதை வைத்து கூறுகிறீர்கள் என்று தெளிவு படுத்து முடியுமா??

      உச்சநீதிமன்றம் வழக்கை எற்றுக்கொண்டு இடைக்கால தடை உத்தரவை பிறபித்து போது அறிவித்த வரிகள்,

      மேலும் இதுவரை தமிழக அரசால் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவையொட்டி அதன் அடிப்படையில் நியமனங்களை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

      Delete
    3. அலெக்ஸ் நண்பரே 2010 சான்றிதல் சரிபார்பில் கலந்து கொண்டவர்கள் தொடர்ந்த வழக்கிழும் நீதிமன்றம் 2012 தேர்வு பணி பெற்றவர்களை பணிநீக்கம் செய்து சான்றிதல் சரிபார்பில் கலந்து கொண்டவர்களுக்கு பணி வழங்கி இருக்க வேண்டுமே ஆனால் தீர்பு அவ்வாறு வரவில்லை முன்னுரிமை மட்டுமே கொடுக்கபடவேண்டும் என தீர்பு வந்தது

      Delete
    4. Mr Alex sir Go 252 judge nagamuthu cancel seithu new weightage system kondu vanthar ithan mulamthan pani niamanum nadaipetrathu ok sir.. Go 25 cancel panniapiraku ithan mulam paniniamanaum petravarkalai disturb Panna vendaam endru kuriyathu

      Delete
    5. திரு பாஸ்கர்.

      பணிநியமனங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று இப்போது யாரும் கணித்து சொல்லமுடியாது. இது தான் இன்போதைய நிலை. ஆனால் நண்பர் பதிவிட்ட கருத்துக்கள் முரன்பாடுகளாக இருந்தது.

      உச்சநீதி மன்றம் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு தடையாணை வழங்கும் போது இந்த வழக்கின் தீர்ப்பு 2013 -ன் தேர்வர்களுக்கு பொருந்தாது என்று குறிப்பிடவில்லை. ஆனால் உச்சநீதி மன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது கீழே குறிப்பிட்டுள்ளேன்.
      "இதுவரை தமிழக அரசால் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவையொட்டி அதன் அடிப்படையில் நியமனங்களை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்"

      Delete
    6. நிணைவில் கொள்ளவேண்டியது

      "இதுவரை தமிழக அரசால் செய்யப்பட்ட நியமனங்கள்"

      Delete
    7. Nice Mr Natarajan,

      இரண்டும் அரசின் கொள்கை முடிவு தானே. யாரும் தலையிட முடியாது என்று நண்பர் சொல்லியிருந்தார். பின் எப்படி நீதிமன்றம் தலையிட்டு அரசின் கொள்கைமுடிவை தள்ளுபடி செய்தது.

      பணிநியமனம் செய்தவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொன்னது மதுரை உயர்நீதிமன்றம். ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கிற வழக்கு உச்ச நீதிமன்றத்தில். அந்த உச்சநீதிமன்ற்தில் தெளிவாக சொல்லியிருப்பது

      "இதுவரை தமிழக அரசால் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவையொட்டி அதன் அடிப்படையில் நியமனங்களை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்".

      Delete
  4. "போராட்டத்திற்கு வருகை தரும் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளியின் மூலம் பயன் பெற போகும் ஆசிரிய சகாக்கள் அனைவரையும் போராட்ட களம் ஆக்ரோசத்துடன் வரவேற்கிறது..!

    ReplyDelete
  5. Dear ADW and KALLAR friends ......gd mng to all....tomorrow (23.3.15)onwards namathu urimai yai meetaduka vendiya naalaka amaiya anaivarum Chennai nokki vaarir.......please contact concern district friends ......by namakkal friends

    ReplyDelete
  6. Namakkanga urimaiyai venreytukka vaaqungal nanbarkaley!!!

    ReplyDelete
  7. என்னிடம் உள்ள புத்தகத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் அதாவது சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் கேள்விகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் இல்லாத கேள்விகளே இல்லை.
    இந்த புத்தகத்தை படிக்கும் முன்னர் சமச்சீர் பாட புத்தகத்தை நன்றாக படித்த பின்னரே இதில் பயிற்சி செய்யவும் அதாவது உதாரணமாக நாம் ஆறாம் வகுப்பு தமிழ் படித்து விட்டோம் என்ற பிறகு நமக்குள் ஒரு திருப்தி அதாவது படித்து முடித்த திருப்தி வரும். அந்த நிலை வரும் போது இந்த புத்தகத்தில் பயிற்சி எடுக்கவும் ஏனெனில் நீங்கள் யோசிக்காத கேள்விகளும் இதில் இருக்கும் அப்போது மீண்டும் நீங்கள் புத்தகத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விடையை பார்க்காமல் மீண்டும் சமச்சீர் புத்தகத்தில் அந்த கேள்வி எங்கு இருந்து எடுக்கப்பட்டது தாங்களால் ஏன் விடையளிக்க முடியவில்லை என்பதை அறிய முயற்சி எடுக்கவும். இந்த முறையில் படித்தால் வெற்றி உறுதி!!!!!

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சமச்சீர் புத்தகமே அடிப்படை அதையே படியுங்கள்

    தொடர்புக்கு 9976715765





    ReplyDelete
    Replies
    1. Maths science book Erika sir

      Delete
    2. social and TAMIL available please see Best tet Guide &Tnpsc face book group

      Delete
  8. என்னிடம் உள்ள புத்தகத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் அதாவது சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் கேள்விகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் இல்லாத கேள்விகளே இல்லை.
    இந்த புத்தகத்தை படிக்கும் முன்னர் சமச்சீர் பாட புத்தகத்தை நன்றாக படித்த பின்னரே இதில் பயிற்சி செய்யவும் அதாவது உதாரணமாக நாம் ஆறாம் வகுப்பு தமிழ் படித்து விட்டோம் என்ற பிறகு நமக்குள் ஒரு திருப்தி அதாவது படித்து முடித்த திருப்தி வரும். அந்த நிலை வரும் போது இந்த புத்தகத்தில் பயிற்சி எடுக்கவும் ஏனெனில் நீங்கள் யோசிக்காத கேள்விகளும் இதில் இருக்கும் அப்போது மீண்டும் நீங்கள் புத்தகத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விடையை பார்க்காமல் மீண்டும் சமச்சீர் புத்தகத்தில் அந்த கேள்வி எங்கு இருந்து எடுக்கப்பட்டது தாங்களால் ஏன் விடையளிக்க முடியவில்லை என்பதை அறிய முயற்சி எடுக்கவும். இந்த முறையில் படித்தால் வெற்றி உறுதி!!!!!

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சமச்சீர் புத்தகமே அடிப்படை அதையே படியுங்கள்

    தொடர்புக்கு 9976715765





    ReplyDelete
  9. School bk than a solrenga Vera bk enanu solunga sir

    ReplyDelete
  10. when will trb announce engineering trb postponed exam and polytechnic trb exam.. anyone may know please reply me..

    ReplyDelete
    Replies
    1. May be this month polytechnic Trb announcement...

      Delete
  11. intha book page pakkanumna please see Best Tet Guide& Tnpsc Face book group

    ReplyDelete
  12. Dinamalar told 10000 post from tet

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி