10 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் இந்த மாதம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2015

10 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் இந்த மாதம் வெளியீடு


10.5 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் இம்மாத இறுதியில் வெளியிடப் படும் என்று டி.என்.பி. எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.டி.என்.பி.எஸ்.சி. தலை வர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்&4 பதவியில் காலியாக உள்ள 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 10.5 லட்சம் பேர்எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் ரிசல்ட் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.2012ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேர்முக தேர்வு நடந்தது. இந்த நிலையில், ஆய்வாளர் தேர்வையும், நேர்முக முடிவுகளையும் ரத்து செய்ய கோரி மதுரை கோர்ட்டில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், இந்த தேர்வுக்கான ரிசல்ட்டும் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாநில நீதித்துறையில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் 162 காலி பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிநடத்தப்பட்டது. இதில், 590 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இதில் 341 பேர் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி