தமிழக அரசுத் துறையில், 1,000 குரூப் - 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
உயர் நீதிமன்றத்தில்:
தட்டச்சர் பணி, தோட்டக்கலை அலுவலர் பணி மற்றும் குரூப் - 2 பணிகள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுப் பணிகள் முன்பை விட விரைவுபடுத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் நடக்கிறது; தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், இவ்வார இறுதியிலும், குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும். ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்ட, குரூப் - 1 பதவிகளுக்கு, மே 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுத் துறைகளில், 50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. புதிய பணி நியமனத்துக்கான பட்டியல், அலுவலர் தேர்வுக் குழு பட்டியலின் படி நடக்கும். குரூப் - 2 பதவிகளுக்கு, 1,000 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், சப் - கலெக்டர், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரி அதிகாரி போன்ற, குரூப் - 1 பதவிகளுக்கு, 60 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்வு தேதி, இம்மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
group 2 ku ethellam padikanum grp 2 ku prepare panravanga sollunga
ReplyDeleteமுதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!
ReplyDeletePG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 25 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 7598299935
This comment has been removed by the author.
ReplyDelete