10ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் திடீர் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2015

10ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் திடீர் மாற்றம்

சேலம்: தமிழகத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு தேர்வெழுதி, 2015-16ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் புத்தகத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தின் கடைசியிலும், பயிற்சி வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். பொதுத்தேர்வில், இவற்றிலிருந்தே பெரும்பாலும் கேட்கப்படும். நடந்து முடிந்த தேர்வில் கூட, 100 சதவிகிதம், 'புக் பேக்' வினாக்களாக இருந்ததால், மிகவும் எளிமையாக இருந்ததாகவும், சென்டம் வாங்குபவர்களின் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டை விட, இரு மடங்கு, 'புக் பேக்' வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஐந்து மதிப்பெண் வினா, 25 லிருந்து, 108 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வினாக்களை படிக்க, மாணவர்கள் சிரமப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி