அவசர போலீஸ் உதவி, சாலை விபத்து, தீ விபத்து, உயிர் காக்கும் அவசர மருத்துவஉதவி உள்ளிட்ட அனைத்து அவசர உதவிகளுக்கும் ‘112’ என்ற ஒரே இலவச அழைப்புஎண்ணை பயன்படுத்துமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’பரிந்துரைத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள அவசர அழைப்பு எண்களான 100, 101, 102, 108 போன்ற எண்களுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணான '911' போல் இந்தியாவிலும் புதிய ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணாக ‘112’-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் எனமத்திய அரசுக்கு ‘டிராய்’ இன்று சிபாரிசு செய்துள்ளது.
இந்த ஏற்பாட்டின்படி, தற்போது 100, 101, 102, 108 போன்ற எண்களுக்கு தனித்தனியாக செல்லும் அனைத்து அழைப்புகளும் ‘112’ என்ற மைய எண்ணுக்கு சென்றடையும். அங்கிருந்து எவ்வித உதவி தேவைப்படுகின்றதோ.., அந்த துறைக்கு அந்த அழைப்பு மாற்றம் செய்யப்படும். நாட்டில் உள்ள அனைத்து தரைவழி தொலைபேசி மற்றும் கைபேசி உரிமையாளர்கள் தங்களது இணைப்பில் பணம் இருப்பு இல்லாத வேளைகளிலும், இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்ட நிலையிலும் இந்த ‘112’ என்ற புதிய எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி, ஆபத்தில் தவிக்கும் அழைப்பாளர்களை விரைவாக சென்றடையும் வகையில் அவர்களின் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை வைத்தே உதவி தேவைப்படும் நபர்கள் எந்த இடத்தில் இருந்து அழைக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து விரைந்து செயலாற்றும் வகையில் அவசர உதவி மையங்களில் சில நவீன ஏற்பாடுகளை செய்யவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி