ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் கல்லூரியில் இருந்து பணியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக கூறி 20 தமிழர்களை கடந்த 7ம் திகதி சிறப்பு அதிரடிப்படை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் அருண்குமார் (27) தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.திருவண்ணாமலை போளூரை சேர்ந்த இவர் திருமணம் ஆகி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.மேலும், ஆந்திராவில் தமிழர்கள் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டனர் என்று கூறி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
good...
ReplyDeleteREAL TAMILAN prof.ARUNKUMAR....
ReplyDeleteTAMIL VANAKKAM