கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை 25ம்.தேதி மாற்றிக்கொள்ளலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2015

கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை 25ம்.தேதி மாற்றிக்கொள்ளலாம்


கிழிந்த பழைய நோட்டுகள் இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பழைய, கிழிந்த மற்றும் அழுக்கான, குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளைபுழக்கத்திலிருந்து அகற்றி, அவற்றுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சுத்த நோட்டுக் கொள்கையின் கீழ், தனிச் சிறப்பு ஏற்பாடாக நாளைக்கு (25–ந் தேதி) 32 வணிக வங்கிகளின் 195 கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதோடு, கிழிந்த, சிதைந்த நோட்டுகள் மற்றும் குறைபாடுடைய நோட்டுகளையும் குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளில் நாளை மாற்றிக்கொள்ளலாம்.

எந்தெந்த வங்கிகள்?

அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோவங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேசன் வங்கி, அலஹாபாத் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி.வங்கி ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைசியா வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, பெடரல் வங்கி, ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, டி.என்.எஸ்.சி வங்கி, கதோலிக் சிரியன் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் முக்கிய கிளைகளில் இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி