அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பரில் நெட் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
இதுவரை யுஜிசி நடத்தி வந்த இந்தத் தேர்வை கடந்த முறைசிபிஎஸ்இ ்) நடத்தியது. இதேபோல இந்த முறையயும் யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெட் தகுதித் தேர்வு பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், மானுடவியல், கல்வியியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடியா, சமஸ்கிருதம் உட்பட 84 பாடங்களுக்கு ஜூன் 28ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வு எழுதலாம். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை (16ம் தேதி) முதல்www.cbse.nic.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 15ம் தேதி தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.
last exam result............next exam ma
ReplyDelete