'நெட்' தகுதித்தேர்வு:ஜூன் 28ல் நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2015

'நெட்' தகுதித்தேர்வு:ஜூன் 28ல் நடக்கிறது.


கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர் பணிக்கான, தேசிய அளவிலான, 'நெட்' தகுதித்தேர்வு, ஜூன் 28ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைநேற்று துவங்கியது.பல்கலைகள், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், பேராசிரியராக பணிபுரிய, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., வாரியம் சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வு இந்த ஆண்டு, மொத்தம், 84 பாடப்பிரிவுக்கு, நாடு முழுவதும்,89 நகரங்களில் நடக்கிறது.கடந்த ஜூன் 28ம் தேதி, ஒரே நாளில், மூன்று தேர்வுகள் தலா, 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன. முதல் தாள், காலை9:30 - 10:45 மணி வரை; இரண்டாம் தாள், 11: 15 - 12:30 மணி வரை; மூன்றாம் தாள், 2:00 - 4:30 மணி வரையிலும் நடக்கிறது.இத்தேர்வுக்கு, ஆன் - லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை, நேற்று துவங்கியது. மே 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 16ம் தேதிக்குள், தேர்வு கட்டணத்தை வங்கிகளில் செலுத்தி விட வேண்டும். தேர்வு விவரங்களை, http://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி