கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2015

கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தனியார் பள்ளி செயலர் பி.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்களை ஆண்டுத் தேர்வுமுடியும் நாளில் வழங்கி விட்டு கோடை விடுமுறையிலே பாடங்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறையில் கடும் வெப்பம் வாட்டிவதைக்கும் நிலையில் ஆண்டுப் பொதுத்தேர்வு முடிந்த உடனேயே வகுப்புகளைநடத்த கட்டாயப்படுத்துவது மாணவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என உளவியல் அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள கூறுகின்றனர்.

சனிக்கிழமை தோறும் வகுப்புகள், மாலை நேரப் படிப்பு மற்றும் விடுமுறை நாள்களில் சிறப்புத்தேர்வுகள் என மாணவர்களுக்குத் தரப்படுகின்ற தொடர் அழுத்தங்கள் ஆசிரியர்- மாணவர் உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பள்ளிக் கல்வித் துறை உணர மறுக்கிறது. கோடை விடுமுறையில் வகுப்புகள் என்ற பெயரில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும்.எனவே மாணவர்கள் கோடை விடுமுறையை அனுபவித்து தெளிந்த மனநிலையோடு ஜூன் மாதத்தில் பள்ளிக்கு வருவது தான் சரியான நடவடிக்கையாகும். எனவே கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கல்வியாளர்களைத்தான் கல்வித்துறை செயலாளராக அறிவிப்பார்கள். ஆனால் தற்போதைய செயலாளரோ,அப்படியில்லை.பள்ளிக்கல்வித் துறை செயலர் ஐ.ஏ.ஸ்.அதிகாரி.அவருடைய சிந்தனை அப்படித்தான் இருக்கும். மணவர்களின் மன நலம் , உடல் நலம்கருதித்தான், கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் கோடை விடுமுறையில் வகுப்பு என்பது சரியல்ல.அப்படியே வகுப்பு எடுத்தாலும் வராத மாணவர்களை என்ன செய்வது. பள்ளி திறந்தவுடன் அவர்களுக்கு எப்படி நடத்துவது?.தனியார் பள்ளி, மாண்வர்களையும், அரசுப்பள்ளி மாணவர்களையும் ஒன்றாக எண்னக்கூடாது.பெற்றோர்களின் ஒத்துழைப்பும் ஒன்றல்ல.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி