உதவி வேளாண் அலுவலர் தேர்வு முடிவு 3 மாதங்களில் வெளியிடப் படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணியில் 417 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களில் நேற்று எழுத்துத்தேர்வு நடந்தது.முதல் தாளான வேளாண்மை தேர்வு காலையிலும், 2-வது தாளான பொது அறிவு தேர்வு பிற் பகலும் நடைபெற்றன.
மாநிலம் முழுவதும் 3,200-க்கும் மேற்பட் டோர் தேர்வெழுதினர்.சென்னையில் பழைய வண் ணாரப்பேட்டையில் உள்ள பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், “உதவி வேளாண் அலுவலர் தேர்வை முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. எழுத்துத் தேர்வு முடிவு 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி