அரசு உதவி பெறும் 50,000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2015

அரசு உதவி பெறும் 50,000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை!


ஒவ்வொரு மாதமும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் போதே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.பிரதி மாதம், 5ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் சேர்க்கப்படும்.
ஆனால், இம்மாதம், நிதியாண்டு கணக்கு மார்ச், 31ல் முடிந்த பின், அரசு விடுமுறை நாட்கள் வந்ததால், ஏப்ரல் 6ம் தேதி தான், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் கிடைத்தது.இருந்தும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் இன்னும் சம்பளம் வழங்கவில்லை. இதனால், 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் விசாரித்த போது, 'சம்பளக் கணக்கு மற்றும் பட்டுவாடா அலுவலகத்துக்கு, நிதித்துறையில் இருந்து, இன்னும் ஊதியம் வழங்கும் உத்தரவு வரவில்லை. அதனால், சம்பளம் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. உயரதிகாரிகளிடம் பேசி வருகிறோம்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி