ஆசிரியப் பயிற்றுநர் நண்பர்களே...... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2015

ஆசிரியப் பயிற்றுநர் நண்பர்களே......


885 ஆசிரியப் பயிற்றுநர் நண்பர்கள் பள்ளிக்கு மாறுதல் பெற்றால், அந்த இடத்திற்கு கட்டாய பணிமாறுதலில் அனுப்பப்பட்ட நண்பர்கள் அவரவர் விருப்பப்படி திரும்புவர் மேலும் 500 ஆசிரியப் பயிற்றுநர் நண்பர்கள் பள்ளிக்கு மாறுதல் பெற்றால், மொத்தமுள்ள 1385 காலி பணியிடங்களுக்கு புதிய நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். நம்மிடம் பலவகையான புள்ளிவிவரங்கள் பெறுவதற்காக எந்தவித சமாதானமும் செய்து கொள்ளாமல் குறித்த நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்று ஆணை வழங்கும் உயர்அலுவலர்கள் ஏன் நீதிமன்ற ஆணையினை செயல்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்?

நமக்கு கொடுக்கப்படும் பணியினை குறித்த நேரத்தில் எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் எப்படி முடித்துக் கொடுக்கின்றோமோ... அதைவிட முக்கியம் நமக்கான நமது உரிமையை, நமக்கு வழங்கப்பட்ட நீதியை நாமும், நமது நண்பர்களும் அனுபவிப்பது.. நம்முடைய உடல் நிலை மற்றும் மனநிலையை வேதனைக்குள்ளாக்கக்கூடிய பலவகையான படிவங்கள் அதிலும் Target என்ற ஒன்றை முடிவு செய்து அவற்றை நோக்கி நம்மை அலைகழிக்க வைக்கும் படிவங்களை உருவாக்கும் உயர்அலுவலர்களுக்கு, பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை குழப்பும் படிவங்களை உருவாக்கும் உயர்அலுவலர்களுக்கு, வெறும் செயல்முறைகள் அதுவும் கவர்னர் ஆணையை மீறிய வரலாறு படைத்த செல்முறைகளை உருவாக்கிய உயர்அலுவலர்களுக்கு, நம்முடைய 1385 ஆசிரியப்பயிற்றுநர் நண்பர்களை பள்ளிக்கு பணிமாறுதல் செய்வதும், அவற்றுக்கு புதிய நண்பர்களை தேர்வுசெய்வதும் மிகச்சாதாரணம். இவற்றை அவர்களாக செய்ய மாட்டார்கள். நாம்தான் செயல்படுத்த வைக்க வேண்டும்.

உயர் அலுவலர்,அதிகாரிகளின் வெறும் புன்னகை அதுவும் பொய் பூசிய புன்னகைக்காக நமது உடலையும், மனதினையும் வருத்தி உழைக்கும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது உரிமையை பெற்றிட, போராடுவது அவசியம். எனவே 4000-க்கும் மேற்பட்ட ஆசிரியப்பயிற்றுநர்கள் அனைவரும் நமக்குள்ளான வேற்றுமைகளை மறந்து ஒன்றுகூடுவோம் வருகின்ற "10.5.2015 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில்". நமது 4000-க்கும் மேற்பட்டோரின் பட்டினிப் போராட்டத்தின் வலியானது,உரைத்துச் சொல்லட்டும் உயர்அலுவலர்களுக்கு நீதியின் வழியை, நிறைவேற்றும் நெறிமுறையை.

இப்படிக்கு
ARGTA, state leader. Mr Rajikumar

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி