மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2015

மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?


மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு அதிகாரிகள்- ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது கடந்த 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பணியாற்றக் கூடிய அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், அதிகாரிகளுக்கும் பொருந்தும். மத்தியஅரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்த வேண்டுமெனில், மாநில அரசுதனியாக உத்தரவை வெளியிட வேண்டும். அதன்படி, இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர்கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.இந்த உத்தரவுப்படி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு பணத்தையும் ரொக்கமாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு ஐஏஎஸ் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கணக்காயர் அலுவலகம், தமிழக கருவூலத் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாநில அரசு ஊழியர்கள்:

தமிழகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குமத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பணிபுரியும் அரசுத் துறை ஊழியர்கள்- அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் என 18 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதற்கான கோப்புகள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்த கோப்புகள் கையெழுத்தானவுடன் அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஓரிரு நாள்கள் அல்லது இந்த வார இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி