இஷ்டம் போல ஆய்வு கூட்டம்: வாரிய அதிகாரிகள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2015

இஷ்டம் போல ஆய்வு கூட்டம்: வாரிய அதிகாரிகள் தவிப்பு

அரசு உயர் அதிகாரிகள், உயர்நிலை ஆய்வு கூட்டத்திற்கு, இஷ்டம் போல் அழைப்பதால், மின் வாரிய அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு, மின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய, உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவில், மின் துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், தலைமை செயலர், தமிழக அரசின் ஆலோசகர், எரிசக்தி துறை செயலர், மின் வாரிய தலைவர் ஆகியோர் உள்ளனர். சென்னை, தலைமை செயலகத்தில், உயர்நிலை குழு கூட்டம், திங்கள் தோறும், காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை நடக்கும். இதில், ஒரு வார மின் உற்பத்தி, மின் தேவை, மின் நுகர்வு, அணையில் தண்ணீர் இருப்பு உள்ளிட்ட விவரம் குறித்து ஆலோசிக்கப்படும். ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்த பின், குழு கூட்டம், திங்கள் தோறும், மாலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்கு மாற்றப்பட்டது. ஆனால், அரசு உயர் அதிகாரிகள், குறிப்பிட்ட நேரத்திற்கு, கூட்டம் நடத்தாமல், இஷ்டம் போல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, தலைமை செயலக கூட்டத்திற்கு செல்ல, மின் வாரிய அதிகாரிகள் தயாராக இருந்தனர். ஆனால், திடீரென பிற்பகல், 12:00 மணிக்கு, கூட்டத்திற்கு வருமாறு கூறியதால், அவசர கதியில் மின் வாரிய அதிகாரிகள் அங்கு சென்றனர். இதனால், திங்கள் தோறும், பிற்பகல், 12:00 மணிக்கு, மின் வாரிய அலுவலகத்தில் நடக்கும், 'போர்டு லெவல் டெண்டர் கமிட்டி' கூட்டம், பார்வையாளர் சந்திப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி