கல்வித் துறை நியமனங்கள் காவிமயமாக்கப்படவில்லை: ஸ்மிருதி இராணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2015

கல்வித் துறை நியமனங்கள் காவிமயமாக்கப்படவில்லை: ஸ்மிருதி இராணி


கல்வித் துறை நியமனங்கள் காவிமயமாக்கப்படவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவில் ஹிந்துத்துவக் கொள்கைகளைக் கொண்டவர்களை மத்திய அரசு நியமித்துள்ளதாக காங்கிரஸைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த சுகதா போஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் அப்போது குற்றம்சாட்டினர்.அதற்கு ஸ்மிருதி இரானி பதிலளித்துப் பேசியதாவது:

அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டே கல்வி முறைகளைப் பரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். அதையே நான் மீண்டும் கூற விரும்புகிறேன்.கல்வித் துறை காவிமயமாக்கப்படவில்லை. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய பூரபி ராய், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான சச்சிதானந்த சகாய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கல்வித் துறைக்கு, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு செலவிட்ட தொகையைவிட அதிகமாகவேமத்திய பாஜக அரசு செலவிட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சுகதா போஸை குறிப்பிடும் வகையில் ஆவேசமாக சில கருத்துகளை ஸ்மிருதி இரானி தெரிவித்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திரிணமூல் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதை ஸ்மிருதி இரானி ஏற்க மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி