இயக்குநர்களுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் சந்திப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

இயக்குநர்களுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் சந்திப்பு.


01.04.2015 தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், RMSA இயக்குநர் முனைவர் க. அறிவொளி, தேர்வுத்துறை இயக்குநர் திரு. கு. தேவராஜன், SCRT இயக்குநர் முனைவர் வி.சி. ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வாணையஉறுப்பினர் செயலாளர் திருமதி. தன். வசுந்தராதேவி ஆகியோரை ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா. அண்ணாமலை அவர்கள் சந்தித்தார்.
ஏப்ரல் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள ஐம்பெரும் விழாவில் 1000 பக்கங்கள் கொண்ட அரசாணைகள் தொகுப்பு வெளியிடுவது பற்றி இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். இந்த முயற்சியை வரவேற்று, பாராட்டி வாழ்த்து தெரிவித்து தங்களது புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துக் கடிதங்களை அனைத்து இயக்குநர்களும் வழங்கினார்கள்.இந்த சந்திப்பின் போது தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் தம்பு. இராமதாஸ் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி