தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதிக் கல்லூரிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் எம்.வெங்கட்ராமன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக ஒரு மருத்துவக் கல்லூரியில் பணம் வசூலிக்கப்படுகிறது. அதனால், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த தொகையை வசூலிப்பதை ஒழுங்குபடுத்தவும், அதிகமாக பெறப்பட்ட தொகையைத் திரும்ப அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நடந்தது. விசாரணையின்போது அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் அளித்த ஆவணங்களைக் கொண்டு மட்டும் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது. அதனால், மேற்கூறப்பட்ட பிரச்னையை சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்யணக் குழு ஆய்வு செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்லூரியின் கடைசி மூன்று ஆண்டுக்கான அனைத்து ஆவணங்களையும், வங்கி நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். அதுகுறித்து எங்களிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், இதுதொடர்பாக அனைத்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றியதற்கான அறிக்கையை ஜூலை 3-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி