சென்னை மாவட்ட இளைஞர் நீதிக்குழு உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
சென்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்ட அறிக்கை: 2006ம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி, சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக் குழுமத்திற்கான சமூகப்பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்த சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.குற்றவியல், உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையியல், கல்வி, அரசியல், அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம் (அ)மருத்துவம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாகவும், வயது 35 முதல் 65க்குள்ளும் இருத்தல் வேண்டும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை (http;/www.tn.gov.in/departments/30) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, வரும் 24ம் தேதிக்குள் ஆணையர், சமூகப்பாதுகாப்பு துறை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை, 600-010 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி