காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதை முன்னிட்டு, பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர்களையும், இதர ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி சத்துணவு மையத்தின் பொறுப்புகளைப் பெற்றிட மாவட்ட நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன.
அரசின் இந்த முடிவைக் கைவிட்டு, போராடும் சத்துணவு ஊழியர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். ஆசிரியர்களுக்கும், சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே தேவையற்ற விரோத மனப்பான்மையை வளர்க்கும் ஊழியர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் சத்துணவு வழங்குவதை மேற்பார்வையிட்டு வரும் நிலையில், சத்துணவு தயாரிக்கும் பணியைச் செய்திட நிர்பந்திக்கும் மாவட்ட நிர்வாகங்களை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி