சிறப்பாசிரியர் கோரிக்கை-போட்டி தேர்வை ரத்து செய்ய அரசு மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2015

சிறப்பாசிரியர் கோரிக்கை-போட்டி தேர்வை ரத்து செய்ய அரசு மறுப்பு


'குழப்பமான பாடத்திட்டம் கொண்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், கலை, ஓவியம், தையல் மற்றும் இசைப் பிரிவு ஆசிரியர்கள், கவலை அடைந்துள்ளனர்.
பணி நிரந்தரம் தமிழக பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சிறப்பாசிரியர்களான ஓவியம், கலை, தையல் மற்றும் இசைப் பிரிவில் பணியாற்றுவோருக்கு, 10ம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு போட்டித் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்தயாரித்து, அரசின் ஒப்புதலுடன், கடந்த ஜனவரியில் வெளியிட்டது.பாடத்திட்டம் மிகவும் குழப்பமாக உள்ளதாகவும், அதிக கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கு கூட, கடினமாக உள்ளதாகவும், கலை ஆசிரியர்கள்அரசுக்கு மனு அனுப்பினர். மேலும், பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத் தலைவர்ராஜ்குமார், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அனுப்பினார்.

ரத்து செய்ய முடியாது இதை விசாரித்த அரசு, போட்டித் தேர்வு அரசின் கொள்கை முடிவு என்பதால், ரத்து செய்ய முடியாது; பாடத்திட்டமும் மாற்றிஅமைக்கப்படாது என, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இத்தகவலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதனால், இத்தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்று சிறப்பாசிரியர்கள் கவலை அடைந்துஉள்ளனர்.

8 comments:

  1. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு... அரசு அறிவித்துள்ள இந்த தேர்வு. ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமா.

    ReplyDelete
    Replies
    1. Ellai. TTC padithavarkal anaivarum kalanthukollalam.

      Delete
    2. மேலே உள்ள செய்தியில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்ததரம் செய்ய போட்டி தேர்வை அறிவித்துள்ளதாக உள்ளதே

      Delete
    3. 14.03.2015 andru kalviseithi il special teacher sampanthamaga veliyana seithiyai parkavum.

      Delete
  2. It's well known that this government not interested for recruiting any kind of teaching job.
    For example special teachers announced 2 years back and college professor announced 2 year back .so for confusion only. What a shameful government

    ReplyDelete
  3. Don't worry government will take another one year to come for conclusion

    ReplyDelete
  4. 16000 SPECIAL TEACHERS I PANI NIRANTHARAM SEYYA MUDIVU EDUTHULLA THAMIZHAGA ARASUKKU 16000 THANKS!!!

    ReplyDelete
    Replies
    1. YEPPO SIR MUDIVU EDUTHTHANGA. EXAM ILLAYA.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி