அரசு விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2015

அரசு விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப பயிற்சி, தங்கும் வசதியுடன், சத்தான உணவுடன் கூடிய, 28 விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

வரும் 2015- 16ம் ஆண்டு விளையாட்டு விடுதியில், மாணவர்களுக்கு தடகளம், சிறகு பந்து, கூடைபந்து, குத்துசண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளு தூக்குதல், கபடி, மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாள் சண்டை, கைப்பந்து, ஹாக்கி, டென்னீஸ், வாலிபால், பளு தூக்குதல், கபடி சேர்க்கை நடக்க உள்ளது.

இதில், ஏழு, எட்டு, ஒன்பது, ப்ளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியருக்கான சேர்க்கை, மே, 3ம் தேதி, ஈரோடு வ.உ.சி., பூங்காவில் காலை, எட்டு மணிக்கு நடக்கிறது.மாணவியருக்கு, ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை நேரு விளையாட்டு அரங்கம், ஈரோடு திண்டல் பாரதி வித்யாபவன், நாமக்கல் செல்வம் மேல்நிலை பள்ளியில் விடுதி உள்ளது.மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை ஒய்.எம்.சி.ஏ., பள்ளி, நெய்வேலி என்.எல்.சி., பள்ளி, சென்னை புதூர் அரசு மேல்நிலை பள்ளி, நாமக்கல் செல்வம் மேல்நிலை பள்ளியில் மாணவர் விடுதி உள்ளது.

விடுதியில் சேர விண்ணப்பிக்க படிவத்தை, பத்து ரூபாய் செலுத்தி, ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். விளையாட்டு விடுதி சார்பான விபரங்களை,www.sdat.inஎன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 0424- 2223157 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி