காப்பி பட்டியலில் கடலூர் முதலிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2015

காப்பி பட்டியலில் கடலூர் முதலிடம்


பிளஸ் 2 தேர்வில், காப்பியடித்து பிடிபட்டவர்கள் பட்டியலில், கடலூர் மாவட்டம்முதலிடம் பெற்றுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு பல கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களுடன் நடத்தப்பட்டது.
மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 'பிட்' வைத்திருந்தாலே முறைகேடு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. 'பிட்'டை கண்டுபிடிக்காத கண்காணிப்புப் பணி ஆசிரியர், ஆறு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.தமிழகம் முழுவதும் காப்பியடித்து பிடிபட்டோர் பட்டியலை, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், 394 பேர் முறைகேடு புகாரில் சிக்கினர். இதில், 265 பேர் மாணவர்கள்; 129 பேர் தனித்தேர்வர்கள்.

காப்பியடித்தோர் பட்டியலில், கடலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு, 68 மாணவர், 36 தனித்தேர்வர்கள் என, 104 பேர் பிடிபட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், 49 தனித்தேர்வர்கள் உட்பட, 63 பேர் பிடிபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு நாளில், 15 மாணவர் முறைகேடு புகாரில் சிக்கினர். விழுப்புரம் மாவட்டத்தில், வேதியியல் தேர்வில், 14 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.அதேநேரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, திருவாரூர் மற்றும் நீலகிரிகல்வி மாவட்டங்களில், பிளஸ் 2 தேர்வில், முறைகேடு புகாரில் யாரும் சிக்கவில்லை.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அரசுப் பள்ளியில், முன், தி.மு.க., ஆதரவு பெற்ற சிலரின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது. அவர்கள் கை காட்டும் ஆசிரியர்களே தேர்வுப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அவர்கள், 'பிட்' அடிப்போரைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆசிரியர்களை, கட்சிக்காரர்கள் துணையுடன் மிரட்டும் நிலை இருந்தது.கடந்த சில ஆண்டுகளாக, சென்னையில் இருந்து, சிறப்புக் கூடுதல் தனிப்படைகள் கடலூர் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆண்டும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி