திங்கட்கிழமை பெட்ரோல் கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2015

திங்கட்கிழமை பெட்ரோல் கிடைக்குமா?

பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த, 'பங்க்' உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க பொதுச் செயலர் ஐதர் அலி கூறியதாவது:தமிழகத்தில், 4,500 உட்பட, நாடு முழுவதும், 53 ஆயிரம் பெட்ரோல் 'பங்க்'கள் உள்ளன.

தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 2.10 ரூபாய்; டீசலுக்கு, 1.20 ரூபாய் என, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் வழங்குகின்றன. பெட்ரோல் பங்க்கில் உள்ள, கழிவறையை சுத்தமாக வைக்கவில்லை என்றால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.எனவே, கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குதல்; அபராதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 11ம் தேதி, பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த முடிவு செய்துள்ளோம். எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை என்பதால், அன்றைய தினமும், பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வரும் திங்கள் கிழமை முதல், அவற்றை வினியோகம் செய்வதில், சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி