ஆய்வக உதவியாளர்கள் பணிக்கு சிவகங்கை, விருதுநகரில் ஆர்வம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2015

ஆய்வக உதவியாளர்கள் பணிக்கு சிவகங்கை, விருதுநகரில் ஆர்வம்

சிவகங்கை,விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் 2,500ஐ தாண்டியுள்ளது.

தமிழக அரசு, உயர், மேனிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் காலிபணியிடங்களை நிரப்ப, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு நடக்கிறது. மே 31ல் அந்தந்த மாவட்டத்தில் தேர்வு நடக்கிறது. குறைந்த பட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு. ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பணி ஏப்.,24ல் துவங்கி, மே 6ல் முடிகிறது. 32 மாவட்டத்திலும் அதிக பட்சமாக சிவகங்கையில் 105, விருதுநகரில் 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரு மாவட்டத்திலும் விண்ணப்பிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வேலை வாய்ப்பக பதிவு செய்து காத்திருக்கும் தகுதியான நபர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் என்பதால், கூடுதல் கல்வித் தகுதியை பெற்ற 35 வயதிற்கும் மேற்பட்டோரிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. விண்ணப்பம் பதிவு செய்ய கூடுதல் கம்ப்யூட்டர், கேமரா மற்றும் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், " சிவகங்கையில் கடந்த 3 தினங்களில் 2,500 தாண்டியது. விருதுநகரிலும் இதே அளவில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் உள்ளது. சொந்த மாவட்டம் தவிர்த்து, அதிக காலியிடமுள்ள மாவட்டத்தில் விண்ணப்பித்தால் தேர்வு எழுதலாம். வேலை வாய்ப்பக பதிவு சீனியாரிட்டி மதிப்பெண் பெற வாய்ப்பு குறைவு. 4 ஆயிரம் காலியிடத்திற்கு இனச் சுழற்சி அடிப்படையில் 20 ஆயிரம் பேர் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்த பின், நேர்காணல் நடக்கும். சிலர் அரசியல் சிபாரிசில் நம்பி விண்ணப்பிக்கின்றனர். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் இன்றி முடியாது. யாரும் ஏமாறவேண்டாம்,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி