அரசு பணிக்கு அறிவிப்பு வெளியிடும்போது குழப்பம் ஏற்படுவதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தவிர்க்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2015

அரசு பணிக்கு அறிவிப்பு வெளியிடும்போது குழப்பம் ஏற்படுவதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தவிர்க்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை ஐகோர்ட்டில், என்.சாந்தி, எம்.எஸ்.கே.மணிபாரதி ஆகியோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், ‘மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த பதவிக்கு நாங்கள் விண்ணப்பித்தோம். எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, கடந்த மார்ச் 5-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். அப்போது, அறிவிப்பு வெளியான 2012-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அன்று எங்களது மோட்டார் வாகனம் ஓட்டுனர் உரிமத்தை நாங்கள் புதுப்பிக்கவில்லை என்றும், அதன்பின்னர்தான் உரிமத்தை புதுப்பித்துள்ளதால், நேர்காணலுக்கு அழைக்க முடியாது என்றும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ‘அரசு பணிக்கு அறிவிப்பு வெளியிடும்போது, குழப்பத்தை ஏற்படுத்தாத வண்ணம் தகுதிகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் குறிப்பிட வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்கள் ஓட்டுனர் உரிமங்களை வைத்திருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அவர்கள் அதை புதுப்பிக்கவில்லை. இதைஒரு குறையாக கூறமுடியாது. மனுதாரர்களுக்கு எதிராக டி.என்.பி.எஸ்.சி. செயலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி