அரசு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிமாறுதல் கவுன்சிலிங் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2015

அரசு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிமாறுதல் கவுன்சிலிங் எதிர்பார்ப்பு


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு,'கவுன்சிலிங்' நடத்தி பணி இட மாறுதல் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைக் கல்வியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்டுவரப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பாடத்துக்கு வரவேற்பு அதிகரித்ததால், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த பாடத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது. மற்ற பாட ஆசிரியர்களை போன்றே, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றபின், கடந்த 2008ல், காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர்.
தேர்ச்சி பெறாதோரின் நியமனம் செல்லாது என, நீதிமன்றம் அறிவுறுத்தியதால், 652 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், முன்னுரிமை பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்த்து, இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில், பணி நியமன கவுன்சிலிங் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், தங்களுக்கு இடமாற்ற கவுன்சிலிங் நடத்த கோரியுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டோரை பணியில் நியமிக்கும் முன், கவுன்சிலிங் நடத்த கோரியுள்ளனர்.

3 comments:

  1. 90 above teachers job conform. date of joining june first week. No problem for those who got job in relaxation. 2013-14 vakent only filled.2014-15 vakent is there.

    ReplyDelete
  2. வேலைக்கிடைத்தால் போதும் என்று போராடிய கணினி ஆசிரியர்கள் இன்று பணிமாறுதல் வேண்டும் என்பதற்கா. நியாயமாக வேலைகிடைக்கவேண்டியவர்கள் இன்று காத்திருக்க வேண்டிய நிலை.
    1 .இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் computer science-இல் B.Ed படித்தவர்கள்.
    2.அதிகம் பயன் அடைந்த்ததுமட்டும் இல்லாமல் இன்று B.ED படித்தவர்களுக்கு தடையாக இருப்பவகளும் அவர்களே,ஆகவே அரசு அதற்கு செவி சாய்க்காமல் முதலில் புதிய கம்ப்யூடர் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துமாறு பணியுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. WELCOME TO ALL NEW COMPUTER TEACHER FROM R.PRAKASH COMPUTER TEACHER THIRU. KAMARAJ MPL HR SEC SCHOOL VILLUPURAM CELL;- 8883766759

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி