தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு

தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு அலுவலர்களுக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, தனிப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2006 ஜனவரி 1ம் தேதியில் இருந்து, மாதத்திற்கு, 600 ரூபாய் வரை தொகுப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் திருத்தப்பட்ட தொகுப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 40 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான, தனிப்பட்ட நிலுவைத் தொகை, உடனடியாக ரொக்கமாக வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கீழ் பணியாற்றும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கும், இந்த ஆணை பொருந்தும் என, நிதித் துறை செயலர் சண்முகம் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி