இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
மத்திய கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி, தமிழக தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழி என்று கொண்டுவர சட்டம் இயற்றப்பட வேண்டும். அத்துடன், இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமரைச் சந்தித்து தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான முயற்சி. சான்றோர் தமிழ்க் காப்பு அமைப்பிற்குப் பாராட்டுக்கள்!
ReplyDeleteதொடக்கக் கல்வி மட்டுமல்லாது, பட்ட மேற்படிப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும். மற்ற மொழியை மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.