உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: உதவி பேராசிரியர் நியமனத்தில்சிக்கல் - பிஎச்.டி. முடித்திருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2015

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: உதவி பேராசிரியர் நியமனத்தில்சிக்கல் - பிஎச்.டி. முடித்திருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம்

தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.9.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டுக்குரியவை ஆகும்.2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. முடித்திருந்தால் மட்டும் தகுதித்தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

இந்த விதிமுறையைத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம் செய்து அதன்படியே, உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களைப் பெற்றது.ஆசிரியர் பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, தமிழ், ஆங்கிலம்,வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு இறுதி தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. பணிநியமன ஆணை விரைவில்வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.இதைத் தொடர்ந்து, உளவியல், சமூகவியல், சமஸ்கிருதம், இந்திய கலாசாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 25-ம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு மார்ச் 31-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்வுப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதற்கிடையே, உதவி பேராசிரியர் பணிக்கு, பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களில், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பிஎச்டி பட்டதாரிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.எனவே, ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய புதிய தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்படுமா? அல்லது முதலில் பணிக்கு அனுமதித்து குறிப்பிட்ட காலத்துக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற கால அவகாசம் அளிக்கப்படுமா? என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

24 comments:

  1. Dear Arul Muthusamy,
    உங்களை நான் இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நம் கருத்துக்கள் வேறுபட்டாலும், என் கருத்துக்கும் மதிப்பளித்தது, உங்கள் உண்மையான கண்ணியத்தை வெளிப்படுத்துகிறது. நன்றி. கடவுள் நம் அனைவருக்கும் நல்லதொரு முடிவை வழங்குவார் என நம்பிக்கையுடன் இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிகப்பு தீ அவர்களே! ஆனால் நீங்கள் எப்போதும் போல் உங்கள் பதிவை வெளியிடவேண்டும்.

      Delete
    2. நன்றி சிகப்பு தீ அவர்களே! ஆனால் நீங்கள் எப்போதும் போல் உங்கள் பதிவை வெளியிடவேண்டும்.

      Delete
  2. நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் பெருமளவு பணம் வாங்கிக்கொண்டு முனைவர் பட்டம் வழங்குகின்றார்கள்.பணம் படைத்தவன் பட்டம் பெறுகின்றான்.இதில் பாதிப்படைவது ஏழை மாணவர்களே.உச்ச நீதிமன்றம்.ஸ்லெட்,நெட் தேர்ச்சி அவசியம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று.தகுதியான நபர்களுக்கு விரிவுரையாளர் பணி கிடைக்கும்.பணமில்லாமல் பணிவாய்ப்பு இழந்தவர்களுக்கு நல்லசெய்தியாக உள்ளது.

    ReplyDelete
  3. Thank you for Kalvisolai for publishing this news. The reason is this. 15 years elapsed since TRB conducted written test for the selection of arts colleges lecturers. TRB are requested to withdraw the tentative selection list of college lecturers recruitment and publish SET and NET passed selected candidates list. Otherwise, conduct a written test for all the candidates. If TRB conducts the written test, only, a few Ph.D., candidates of the present tentative selection list will be selected. so, TRB are requested to save the higher education.

    ReplyDelete
  4. candidates must have cleared the
    National Eligibility Test (NET) conducted by the UGC, CSIR, or similar test
    accredited by the UGC. However, candidates, who are, or have been awarded
    Ph. D. Degree in accordance with the University Grants Commission
    (Minimum Standards and Procedure for Award of Ph.D. Degree) Regulations
    2009, shall be exempted from the requirement of the minimum eligibility
    condition of NET/SLET/SET for recruitment and appointment of Assistant
    Professor or equivalent positions in Universities / Colleges / Institutions

    ReplyDelete
  5. Many universities in tamilnadu did not follow ugc 2009 regulations immediately. at the same time, if a candidate joined Ph.D in the year 2009, that candidate only comes under 2009 regulations. so, that candidate is able to finish Ph.D only in the mid of 2012 in case of regular ph.d candidate or in the mid 2013 in case of part- time ph.d candidate. so, in the TRB arts college selection list, only a few candidates might come in that category. so, a considerable amount of unqualified candidates might be included in that list. If anyone sues a case, they can get a justice as well as a job.

    ReplyDelete
  6. Very good. high weightage should be given to net and set because highly talented people can onlypass.I have taken 6 years to pass

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Have YOU PASSED SLET OR NET Mr.Jegadish Padmanabhan?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Only 7% of the candidates are passed that to after getting minimum eligibility marks on all the three papers .no doubt. according to me. it selects brilliant people.

      Delete
  7. வரவேற்கத்தக்கது

    ReplyDelete
  8. வரவேற்கத்தக்கது

    ReplyDelete
  9. வரவேற்கத்தக்கது

    ReplyDelete
  10. when will we know the trb decision

    ReplyDelete
  11. இத்தீர்ப்பின் மூலம் எத்தனையோ தகுதியான தேர்வர்கள் பி எச் டி படிப்பதற்காக அவர்கள் பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரக்கூடும். பி எச் டி க்கு அதிக மதிப்பெண் நெட் ஸ்லெட் போன்ற தேர்வுகளுக்கு குறைந்த மதிப்பெண் என்ற நிலை மாறுவது நன்மையே

    ReplyDelete
  12. Verdict of Supreme court says NET/SLET is mandatory for those who have not completed their Ph.D in accordance with the UGC 2009 norms.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி