மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு:பல ஆண்டுகள் கனவு நிறைவேறுமா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2015

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு:பல ஆண்டுகள் கனவு நிறைவேறுமா

"தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்குள் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. கல்வித் துறை போல் இம்மூன்று மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பொதுவான மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.இப்பிரச்னை குறித்து ஆசிரியர்சங்க செயலாளர் கூறியதாவது:கல்வித் துறையில் ஆண்டுதோறும் பொது மாறுதல் லந்தாய்வு நடக்கிறது.

இத்துடன் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டுமே உள்ள கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதேபோல் ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது.ஆனால் நான்கு ஆயிரத்திற்கும் மேல் உள்ள இம்மூன்று மாநகராட்சிகளுக்கும் ஒரு பொதுவான கலந்தாய்வு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து மறுக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகங்களில் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் ஆணையாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லை.மேலும் மாநகராட்சி ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மாறுதல் கேட்டால் அதற்கான தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறுவதும் சவலாக உள்ளது. எனவே இந்தாண்டு முதல் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த மூன்று மாநகராட்சி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என்றார்.

4 comments:

  1. PRESENT SCHOOL HALF AN HOUR TRAVEL FROM KRISHNAGIRI BUS STAND HIGH SCHOOL BT MATHS ANY MUTUAL TRANSFER INTRESTED SALEM DISTRICT SIR/MADAM PLEASE CONTACT 9894067198

    ReplyDelete
    Replies
    1. Mutual also asking more moneys what I do in tamilnadu

      Delete
    2. Mutual also asking more moneys what I do in tamilnadu

      Delete
  2. This news is obviously true... If they allow corporation school teachers, many of them can leave the city schools and will shift to their native schools and many more are worrying and waiting for city side (corporation) schools... Please understand our situation And allow us(corporation teachers) for general counselling... What wrong we did... We also wants to go to our own natives :( please take steps...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி