இலவச கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரிகளில் சேர ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏழை மாணவர்கள் இளங் கலை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2015-16ம் கல்வி ஆண்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேருவதற்கு ஏழை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.மேற்சொன்ன 3 மாவட்டங் களைச் சேர்ந்த ஏழை மாண வர்கள், ஆதரவற்ற மாண வர்கள்,விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப் பத்தையும், விவரங்களையும் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள் ளலாம்.பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.unom.ac.in) இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப் பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
மதுரை உயர் நீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 முதல் 17.04.2015 வரை நமது ஆதிதிராவிடர் பள்ளி, நலத்துறை பள்ளிகளுக்கான பணி நியமனம் பற்றிய வழக்குகள் எதுவும் எதுவும் இடம்பெறவில்லை....
ReplyDeleteவழக்கு எண் WP (MD ) 16547/2014 / WP (MD ) 17255 /2014
நண்பர்கள் யாரேனும் இது பற்றி தெரிந்தால் பதிவிடுங்கள்.........