சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது தமிழ்நாடு அரசு அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2015

சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது தமிழ்நாடு அரசு அறிக்கை


சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது என்றும், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் குழந்தைகளுக்குமதிய உணவு வழங்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

சிறப்பு காலமுறை ஊதியம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின்கீழ் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் முதலாம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை உள்ள மொத்தம் 54.63 லட்சம் குழந்தைகளுக்கு 42 ஆயிரத்து 619 சத்துணவு மையங்கள் மூலமாக சுவையான கலவை சாதம் அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கென ஒரு லட்சத்து 28 ஆயிரம் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த அரசு இவர்களுக்கென பல சலுகைகளை நிறைவாக அளித்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2014–15–ம் ஆண்டில்ரூ.1,412.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் உறுதி

சத்துணவு ஊழியர் சங்கம் ஒன்று, 15–ந் தேதி முதல் (நேற்று முதல்) காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சங்கம் உட்பட மேலும் 11 சத்துணவு ஊழியர் சங்கங்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு தகுந்த ஆணைகள் வெளியிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அறிக்கை அளித்தனர்.அதன் பின்னரும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தலைமையிலான பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். எனவே அரசு இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மூலமும் இதர அரசு அலுவலர்கள் மூலமும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.சிறப்பாக பணி நடக்கிறதுஅதன்படி மாவட்டங்களில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களும் 15–ந் தேதி திறக்கப்பட்டு, சத்துணவு சமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 10–ம் வகுப்பு தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மற்ற வகுப்பு குழந்தைகளுக்கும் ருசியான கலவை சாதம் வழங்கும் பணி தொடருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரால் தொடங்கப்பட்ட போராட்டம் தேவையற்றது. அரசால் எடுக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் திட்ட செயல்பாட்டில் எவ்வித சுணக்கமும் இன்றி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி