Apr 11, 2015
Home
kalviseithi
செம்மரத்தால் வீழ்ந்த தமிழனுக்காக- ஆசிரியரின் கவிதை
செம்மரத்தால் வீழ்ந்த தமிழனுக்காக- ஆசிரியரின் கவிதை
Recommanded News
Related Post:
9 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
செம்மரம் திருட முயன்றது குற்றம். இவர்கள் என்ன நாட்டுக்காகவா உயிரிழந்தார்கள்? சமூக சேவை செய்து உயிர் நீத்தார்களா? வனத்தை சேதப்படுத்துதல் என்பது குற்றம். தெரிந்து அதை ஏன் செய்ய வேண்டும். உடனே நீதிமன்றம் எதற்கு? சட்டத்தை காவல் துறையினர் எவ்வாறு கையில் எடுக்கலாம்? நீதிபதிகள் எதற்கு என்று நீண்ட தர்ககம் செய்யலாம். தமிழன் என்று அரசியல் சாயம் பூசப்பட்டு தமிழக அரசியல்வாதிகள் இன்று அதை கையில் எடுத்து உள்ளனர். செய்யாத குற்றத்திற்காக இலங்கையில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு இன்று வரை ஒன்றுமில்லை.
ReplyDeleteதமிழ் கூறும் நல்லுலகில் எத்தனையோ பேருக்கு ஞானக்கண்களைத் திறந்து வைத்து சமீபத்தில் மரித்துப்போன ஜெயகாந்தன் அவர்களுக்கு இரங்கல் கவிதை படைத்திருப்பீர்களேயானால் உங்கள் பாதத்திற்க்கு முத்தமிட்டு இருப்பேன்..தமிழ் எழுத்துலகம் இனி தகப்பன் இல்லாத வீடு. அவரைப்பற்றி எழுதப்பட்டு, என் கண்ணில் விழுந்த ஒவ்வொரு எழுத்தையும், பார்வை வந்த பிறகு தன்னுடைய காதலியைப் பார்க்க விரும்பும் ஒருவனின் பிரியத்தோடு வாசித்து இருக்கிறேன்.....செம்மரக் கட்டையை திருட முயன்றவர்களுக்கு பாரத ரத்னா விருதா கொடுக்க முடியும் ?
ReplyDeleteகையாலாகாத பத்துகோடி மானங்கெட்ட தமிழர்களில் ஒருவன்
ReplyDeleteஉன்னுடைய வாழ்வாதாரம் அழிந்து உன் மக்கள் செத்தாலும் பரவாயில்லை . ஆனால் நீ அணுமின் நிலையம் மூலம் கேரளாவுக்கு மின்சாரம் கொடுக்கணும் . ஏன்னா அவன் இந்தியன் ..
ஆனா அவன் உனக்கு முல்லை பெரியார் அணையில் இருந்து தண்ணீர் தரமாட்டான். ஏன்னா நீ தமிழன் ..
உன்னுடைய சகோதரனின் உழைப்பைக் கொண்டு , உனக்கு மின்சாரம் இல்லை என்றாலும் கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்கணும் . ஏன்னா அவன் இந்தியன் .. அதுக்கும் மேல அவன் திராவிடன்......
ஆனா அவன் உனக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரமாட்டான். ஏன்னா நீ தமிழன் ..
ஆந்திரா எதிர்த்த நியூ ட்ரோ , மீதேன் திட்டத்தை நீ செத்தாலும் பரவாயில்லை . அவன் வாழ உன் தமிழ் நாட்டில் செயல்படுத்தனும்.
ஏன்னா அவன் இந்தியன் ..
ஆனா ஆந்திர முதலாளிகள் கோடீஸ்வரனாக , உழைக்கும் கூலி தமிழ் மக்களை அவன் திருட்டுப்பட்டம் கட்டி சுட்டு கொல்லுவான்.
ஏன்னா நீ தமிழன் ..
எவன் அடிச்சாலும் வாங்கிகிட்டு
இப்படி மானங்கெட்ட இந்தியனா வாழ்வதைவிட
நாமெல்லாம் நாக்க புடுங்கிட்டு சாகலாம்.
இதைக்கூட இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசுனேன்னு சொல்றதுக்கு ஒரு நாலு நாய் வரும்.
ஆனா 20 பேர் கொலை செய்யப்பட்டதை அந்த நாய் கேட்காது.w
இப்போ மூணு பேரு , இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா மாநிலக்காரனும் அடிப்பான், உன் வாய்ல பழத்த வச்சுக்கிட்டு ஒன்னும் சொல்லக்கூடாது . ஏன்னா அவன் இந்தியன் ..
காக்காவையும் , குருவியையும் , பசுவையும் கொன்றால் மேனகா காந்தி வருவாங்க ......
புலியையும் , சிங்கத்தையும் கொன்றால் வனவிலங்கு ஆர்வலர்கள் கொதிப்பாங்க....
தெரு நாய கொன்றால் கூட நாலுபேர் வாரான்.
இந்த நாதியற்ற தமிழனை கொன்றால்
கேட்பதற்கு ??????????????????????????
ஷ் ஷ் ஷ் ஷ்
இதெல்லாம் சொல்ல கூடாது ....
ஏன்னா நாமெல்லாம் இந்தியன்
போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும் .......
(பேஸ்புக் கமென்ட்)
விஜயகாந்த் அவர்களின் பட வசனமோ?
ReplyDeleteஜனநாயகம் தான் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் 2G புகழ் இறக்கை கட்டி பறக்கின்றதே.....
ReplyDeleteமரத்தை வெட்டியதற்கு மரண தண்டனை சரியான தீர்வாகாது
ReplyDeleteமரத்தை வெட்டியதற்கு மரண தண்டனை சரியான தீர்வாகாது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐயா, இனப்பழி சுமத்தி கொலையை மறைக்க முயலவேண்டாம். மாங்காய் பறித்த சிறுவனை சுட்டுக்கொன்ற முன்னாள் இராணுவ வீர்ரின் செயலுக்கு சம்மானது .இச் செயல், கொலை செய்யப்பட்ட 20 பேரின் சடலங்களை உற்று நோக்குங்கள் இவர்கள் சம்பாதித்த பணத்தால் உண்டு கொழுத்தவர்களா? பங்களா கட்டி பரவசம் ஆனவர்களா? இவர்கள் மீது குற்ற வழக்கு எங்கேனும் உண்டா ? இவர்கள் அனைவரும் தேடப்பட்ட குற்றவாளிகளாக பவனி வந்தவர்களா,? துப்பாக்கி வைத்திருந்தார்களா, துப்பாக்கி குண்டுகளை இதற்கு முன்பு கண்ணாலாவது பார்த்திருப்பார்களா,? கொள்ளை அடித்த பணத்தில் இவர்களின் குழந்தைகள் கான்வென்ட்டில் படித்தார்களா? ஏசி அறையில் வசித்தவர்களா? ஏதேனும் ஒரு கேள்விக்கு ஆம் என்று உங்களால் பதில் கூறமுடிந்தால் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள். சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாக இருக்கலாம். அதே சட்டத்தின் பார்வையில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரிதானா, சட்டம் கடமையை செய்யலாம் தப்பில்லை விடுத்தவனை விட்டுவிட்டு அம்புகளை நோவதேன் ?. கோடியில் புரளும் செல்வந்தர்களை தப்பவிட செய்யப்பட்ட மாய என்கவுண்டர். தயவு செய்து இனப்பழி சுமத்தி கொச்சை படுத்த வேண்டாம்.
ReplyDelete