கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில ஆள் சேர்ப்பு நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
எழுத்து, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையிலும் வகுப்பு வாரி சுழற்சிமுறை அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் விவரங்கள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் www.tncoopsrb.in வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான எழுத்து மூல உத்தரவுகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள், விண்ணப்பதாரர்களுக்கு தனியே அனுப்பி வைக்கப்படும் என மாநில ஆள்சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
Transfer facilities available in cooperative bank.anybody knows pls tell
ReplyDeleteI got only district name. Is't selected or waiting list anybody knows pls tell me
ReplyDeleteMobile district mattum kattuthu. Ana computer la allotted institute kattuthu
DeleteThanks for ur info and I saw full details in computer.
Deleteidelam emathu velai.mega periya porattam pannuvom
ReplyDelete