'குழப்பமான பாடத்திட்டம் கொண்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கானபோட்டித் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், கலை, ஓவியம், தையல் மற்றும் இசைப் பிரிவு ஆசிரியர்கள், கவலை அடைந்துள்ளனர்.பணி நிரந்தரம் தமிழக பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கு சிறப்பாசிரியர் களான ஓவியம், கலை, தையல் மற்றும் இசைப் பிரிவில் பணியாற்றுவோருக்கு, 10ம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு போட்டித் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தயாரித்து, அரசின் ஒப்புதலுடன், கடந்த ஜனவரியில் வெளியிட்டது. பாடத்திட்டம் மிகவும் குழப்பமாக உள்ளதாகவும், அதிக கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கு கூட, கடினமாக உள்ளதாகவும், கலை ஆசிரியர்கள் அரசுக்கு மனு அனுப்பினர்.
மேலும், பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் ராஜ்குமார், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அனுப்பினார்.ரத்து செய்ய முடியாது இதை விசாரித்த அரசு, போட்டித் தேர்வு அரசின் கொள்கை முடிவு என்பதால், ரத்து செய்ய முடியாது; பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படாது என, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இத்தகவலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. அதனால், இத்தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்று சிறப்பாசிரியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
சிறப்பாசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துதான் இப்பணியைப்பெற்றார்கள் வேலை நிரந்தரமாக்கப்படும் என்ற உறுதி வழங்கப்படது.இப்பொழுது தேர்வு என்றவுடன்.என்னசெய்வதென்று அறியாமல் விழிக்கின்றார்கள்.
ReplyDelete