தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதேரியா தெரிவித்தார்.
சென்னை குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "குரு ஹர்க்ரிஷண்' என்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ராம் சங்கர் கதேரியா பேசியது: இந்தியா முழுவதும் மாணவிகள், பெண்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேரும் வகையில், அரசு பள்ளிகளின் கல்விமுறையை மேம்படுத்த ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். ஆகிய நிறுவனங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், குருநானக் கல்லூரி கல்வியியல் அறக்கட்டளை தலைவர் ஹர்பன்ஸ் சிங் ஆனந்த், கல்லூரி முதல்வர் எம்.செல்வராஜ், கல்லூரி தாளாளர் மஞ்சித் சிங் நயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி