கூகுள் தேடுஇயந்திரத்தில் நேபாள நில நடுக்கத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2015

கூகுள் தேடுஇயந்திரத்தில் நேபாள நில நடுக்கத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய வசதி


கடுமையான நில நடுக்கத்தால் நிலைகுலைந்து கிடக்கும் நேபாளத்தில் 37 தமிழர்கள் உள்பட இன்னும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கித்தவித்து வரும்வேளையில் நேபாளத்தில் காணாமல் போன மக்களை கண்டுபிடிக்க சிறப்பு தேடுதளம் ஒன்றினை தேடுஇயந்திர ஜாம்பவானான 'கூகுள்' அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தளத்தில் 'நான் இன்னாரைத் தேடுகிறேன்' (I'm looking for someone) என ஒரு பெட்டியும், 'என்னிடம் இன்னாரைப் பற்றிய தகவல் உள்ளது' (I have information about someone) என ஒரு பெட்டியும் இடது-வலதுப்புறத்தில் உள்ளது. தேடப்படும் நபரின் பெயரை இடதுப்புற பெட்டியிலும், தகவல் கிடைக்கப்பெற்ற நபரைப் பற்றிய விபரங்களை வலதுப்புறப் பெட்டியிலும் உலகின் எந்த மூலையில் இருந்தும், யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

இந்த தகவல்கள் அனைத்தும் உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் ஓரிரு நொடிகளுக்குள் சென்று சேர்ந்துவிடும். எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இந்த பெட்டிகளுக்குள் தகவல்களை பதிவு செய்யலாம்.நேபாளத்தில் வசிப்பவர்கள் Text "search <name>"என பதிவிட்டு 6040 என்ற எண்ணுக்கும், இந்தியாவில் இருப்பவர்கள் Text "search <name>" என பதிவிட்டு+91-9773300000 என்ற எண்ணுக்கும், அமெரிக்காவில் இருப்பவர்கள் text "search <name>" என பதிவிட்டு +1 650-800-3978 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.இந்த தேடுதளத்தில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பதிவுகள் வந்து சேர்ந்துள்ளன. இருப்பினும், இதில் பரிமாறப்படும் விபரங்களின் நம்பகத்தன்மையை நாங்கள் சரிபார்ப்பதில்லை. எனவே, அது தொடர்பான விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி