வேளாண் துறை போல் டி.ஆர்.பி.,யிலும் குளறுபடி : பள்ளிக்கல்வி துறை மவுனம்: பட்டதாரிகள் அச்சம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2015

வேளாண் துறை போல் டி.ஆர்.பி.,யிலும் குளறுபடி : பள்ளிக்கல்வி துறை மவுனம்: பட்டதாரிகள் அச்சம்


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யில், குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், டி.ஆர்.பி.,யின் தேர்வுப் பணிகளில், சந்தேகங்கள் எழுந்துள்ளன.சமீப காலமாக, டி.ஆர்.பி.,யின் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பில் குழப்பம், இறுதிப் பட்டியலில் குளறுபடி, நேர்முகத் தேர்வில் பாரபட்சம் என, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

சந்தேகம்

ஆனால், தமிழக கல்வித்துறை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளதால், வேளாண் துறை போல் முறைகேடுகள் நடக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

*ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, டி.ஆர்.பி.,க்கு எதிராக, மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

*இதேபோல், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரிய ஒதுக்கீடு தரவில்லை. இதற்கு, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

*மற்றொரு பிரச்னையாக, போலி ஜாதி சான்றிதழ் கொண்டு வந்தவரை, டி.ஆர்.பி., தேர்வு செய்ததும், வெட்ட வெளிச்சமாகிஉள்ளது. கடந்த, 2012 ஜூனில் நடந்த ஆசிரியர் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா என்பவர், முன்னுரிமைக்காக போலி ஜாதி சான்றிதழ் கொடுத்துள்ளார். அதை சரிபார்க்காமல், ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு உயர் நீதிமன்ற உத்தர வின்படி, இந்த சான்றிதழை, திருவள்ளூர் உதவி கலெக்டர், ராஹுல் நாத் ரத்து செய்துள்ளார். ஆனால், நியமனத்தைஇன்னும், டி.ஆர்.பி., ரத்து செய்யவில்லை.

*அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின், 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி.,யில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பாடவாரியாக நேர்முகத் தேர்வுகள் அறிவித்து, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது.இதில், இறுதி மதிப்பெண் பட்டியலில், வரலாறு பாடத்துக்கு, ஒருவரை மட்டும், டி.ஆர்.பி., தேர்வு செய்துள்ளது. ஆனால், டி.ஆர்.பி., அறிவித்தநபரின் பெயர், நேர்முகத் தேர்வு அழைப்பில் இடம் பெறவில்லை.அவருக்கு தனியாக நேர்முகத் தேர்வு நடத்தியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறைமுக நடவடிக்கை

பணி நியமன விதிகளின்படி, நேர்முகத் தேர்வு மதிப்பெண் அறிவிக்கப்பட்ட பின், யாரையும் தனியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்க முடியாது. அதனால், அரசியல் கட்சிகளின் சிபாரிசு, அதிகாரிகளின் பரிந்துரை என, மறைமுக நடவடிக்கை அதிகரித்துள்ளதோஎன்று, பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

*கடந்த வாரம், கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவைகள், கலப்புத் திருமணம் புரிந்தோர் ற்றும் ுன்னாள் ாணுவத்தினருக்கான ஒதுக்கீடுகளை, டி.ஆர்.பி., பின்பற்றவில்லை என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. இறுதிப் பட்டியலை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சுதாரிப்புஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள் இறுதிப் பட்டியலை அவசர அவசரமாக, கல்வித்துறைக்கு அனுப்பி விட்டனர். பின், கல்வித்துறை சுதாரித்து, 133 கணினி ஆசிரியர் கவுன்சிலிங்கை நிறுத்தி வைத்தது.

மிரட்டல் புகார்

டி.ஆர்.பி., அதிகாரி களிடம் கேட்டபோது, 'மனிதத் தவறுகள் நடக்கத் தான் செய்யும்; அதை ஒன்றும் செய்ய முடியாது' என, தெரிவித்து உள்ளனர். ஒரு சில உயரதிகாரிகளுக்கு, டி.ஆர்.பி.,யில் உள்ள கட்சி சார்பு அரசியல்வாதிகள் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளின் மிரட்டல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன.

36 comments:

  1. True news ...... Thank u Dinamalar...........

    ReplyDelete
  2. Education department activities very worst in this government......

    ReplyDelete
    Replies
    1. 480 vacancy irundha so much happysir. But its unbelievable and how s it possible? Ithuvaraikum avlo vacancy la additional list potadhu illa.

      Delete
  3. Muthusami. Sir additional list coming Monday varuvathu unmaya..pls reply sir....

    ReplyDelete
  4. TRB il Service matrum exserviceman quota vai ADMK govt alithuvittadhu. Naatirkaga vuyir thiyagam seiyum raanuvathinar vaayil mannai poduvadhu sari alla

    ReplyDelete
  5. Apa exam vaika matagala...election varanala avlo vacancy additional list a podurangala sir

    ReplyDelete
  6. Indha 480 vacancy coming trb la add paniduvangala?

    ReplyDelete
  7. Exam undu manasa kulapikama padika arambinga. Lst vanda nalade

    ReplyDelete
  8. Praba sir exam conform than a...padikerengala....

    ReplyDelete
  9. Yes i am start.idhan namaku last chance. 2 thadava cv poi vaipai ilanden. Inda murai 1 markla vitruken so poraduvom. All the best

    ReplyDelete
  10. 480 vacancies in cs idu unmaiya sir?

    ReplyDelete
  11. CS fill up post 490 but BC community only 380 other community ?????

    ReplyDelete
  12. Secondlist not conform but next trb conform

    ReplyDelete
  13. We can expect the PG exam only on year end ie Nov/Dec 15. Nearby is not possible.exam may be on Jan 2016. So pray for addl vacancy list.

    ReplyDelete
  14. Next trb july or auguestla calfor varunu somebody saying.

    ReplyDelete
  15. Next trb july or auguestla calfor varunu somebody saying.

    ReplyDelete
  16. muthu sami sir pgtrb SECOND LIST EPPO SIR VARUTHU PLZ REPLY ME

    ReplyDelete
  17. Exam varuma...2 list varuma...correct a solunga pa

    ReplyDelete
  18. Exam a......2 list a........ethu conform...........

    ReplyDelete
  19. Pg Trb second list patri detail theriyanumna intha no call pannungka 7373008144,
    7373008134

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Ena sir ipdi solrenga....ethumae varatha...pls reply

    ReplyDelete
    Replies
    1. Vanavil paravai oru number kuduthrukanga sabari sir. Cal pani unga doubtfulam clear panikonga

      Delete
  22. Ramanadhan sir eppo call panni kettingka....

    ReplyDelete
  23. I am calling trb every two days once. The answer is same.you may also call sir.

    ReplyDelete
  24. Hardwrk sir nenga ph pani ketengala .....ethum news therinja solunga.....

    ReplyDelete
  25. Ramanadhan sir same responce.....

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Mr muthusamy plz stop the wrong comments.and don't give wrong news.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி