என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது


என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது.தமிழ்நாட்டில் 538 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில்நிரப்புகிறது.
இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.சென்னையில் 4 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் என்ஜினீயரிங் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. நேரிலும், தபால் வழியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பி.இ., பி.டெக் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் மாணவ– மாணவிகளுக்கு இன்று வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–பொறியியல் படிப்பில் சேருவதற்கு இன்று முதல் 27–ந்தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும். சென்னை மையத்தில் மட்டும் 29–ந்தேதி வரை கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29–ந்தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இந்த ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 29–ந்தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கு 30–ந்தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.பொது கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 19–ந்தேதி வெளியிடப்படும். கலந்தாய்வில் பங்கேற்க சென்னை வரும் மாணவ–மாணவிகளுக்கு வழக்கம் போல குடிநீர், கழிப்பிட மற்றும் குளிப்பதற்கான வசதி செய்து தரப்படும்.அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்க 10 கவுண்டர் திறக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவினருக்கு தனி கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் உடற்தகுதி சான்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் கலந்தாய்வை பார்க்க வசதி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
    உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

    முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

    அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.

    சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
    எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.

    இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 50 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    தற்போது....

    அலகு 6 -சங்கம்- பாட்டும் தொகையும்-சங இலக்கிய சிறப்புகள்-அரசர்கள்-புலவர்கள் பகுதிக்கான விரிவான பயிற்சி, நினைவுக்குறிப்புகள், தேர்வு - தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் ஆகியவை நிறைவுற்றுள்ளது

    (வினாத்தாள் 1 வெளியிடப்பட்டுள்ளது)

    (05.05.2015) முதல் அலகு 7 க்கான பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகின்றது
    நீங்களும் இணையுங்கள்
    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
    வெற்றி- 7598299935

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி