10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : பள்ளிகளில் சிறப்புவகுப்பு நாளை முதல் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2015

10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : பள்ளிகளில் சிறப்புவகுப்பு நாளை முதல் தொடக்கம்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 7ம் தேதி பிளஸ் 2, 22ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு அடுத்த மாதம் 22ம் தேதி சிறப்பு உடனடித்தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு ஜூலை மாதம் 16ம் தேதி சிறப்பு உடனடித்தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவதற்காக அனைத்து சிஇஓக்களுக்கும் மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு வரவழைத்து, சிறப்பு பயிற்சி கொடுக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டகளிலும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி